படிப்பு வரம் தரும் பரிமுகன்
Page 1 of 1
படிப்பு வரம் தரும் பரிமுகன்
மது, கைடபன் எனும் இரு அசுரர்கள், ஆணவம் கொண்டு, தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். பிரம்மா திருமாலிடம் முறையிட, திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார். மது, கைடபரால் பெருமை இழந்த வேதங்களை, பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவர் உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார். ஆனாலும் அசுரர்களுடன் போரிட்ட வேகத்தில் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அதைத் தணிக்க திருமகள் அவரது மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தினாள். அந்த நிலையில் அவர் லட்சுமி ஹயக்ரீவர் என வணங்கப்பட்டார்.
வேதங்களை மீட்ட இந்தக் கல்விக் கடவுளுக்கு புதுச்சேரியில் ஒரு ஆலயம் உள்ளது. மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அவர் சேவை சாதிக்கிறார். கருவறையில் ஹயக்ரீவ மூர்த்தியின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை எம்பிரானையும் அணைத்த வண்ணம் உள்ளன. இந்த ஹயக்ரீவரை தரிசனம் செய்தால் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்னைகள் விலகுகின்றன. மூலவரின் கீழே சக்தி வாய்ந்த யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. படிப்பில் மந்தமாக உள்ளவர்களும் பேச்சுக் குறை உள்ளவர்களும் இந்தப் பெருமாளை தரிசித்து அக்குறைகள் நீங்கப் பெறுகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில், ராமகிருஷ்ணா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படிப்பு வரம் தரும் பரிமுகன்
» படிப்பு வரமருளும் பரிமுகன்
» சிறந்த படிப்பு தரும் சிவன்
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் விரதங்கள்
» படிப்பு வரமருளும் பரிமுகன்
» சிறந்த படிப்பு தரும் சிவன்
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் விரதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum