சிறந்த படிப்பு தரும் சிவன்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
சிறந்த படிப்பு தரும் சிவன்
விஜயதசமியைக் கல்வித் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பல குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக இருக்கவும், கையெழுத்து திருந்தவும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லலாம். இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்கு பிள்ளையை கோவில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார்.
அந்நேரத்தில் அவர் கணக்கை சரிவர எழுதி முடிக்கவில்லை. எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார். ஆனால் மறுநாள் காலையில் அரசர் கணக்கு பிள்ளையை அரண்மனைக்கு அழைத்து பாராட்டினார். கணக்கு பிள்ளைக்கோ எதுவும் புரியவில்லை.
இதுவரை பார்த்த கோவில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர். கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார் பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள்யாவும் முத்து முத்தாக இருந்தன. சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர்.
இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்ததோடு கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி நின்றார். அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் "எழுத்தறிநாதர்'' என்ற பெயர் பெற்றார். ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில் எழுதுகிறார்கள். தினமும் இந்த வழிபாடு இக்கோவிலில் நடக்கிறது. பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இங்கு அர்ச்சனை செய்தால் நன்கு பேசும் திறன் உண்டாகிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» செல்வம் தரும் சிறந்த ஹோமம்
» படிப்பு வரம் தரும் பரிமுகன்
» சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன்-சங்கரன்-சிவன் வழிபாடு
» சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன்-சங்கரன்-சிவன் வழிபாடு
» செல்வம் தரும் சிறந்த ஹோமம்
» படிப்பு வரம் தரும் பரிமுகன்
» சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன்-சங்கரன்-சிவன் வழிபாடு
» சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன்-சங்கரன்-சிவன் வழிபாடு
» செல்வம் தரும் சிறந்த ஹோமம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum