தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி உத்திரம்-30

Go down

பங்குனி உத்திரம்-30 Empty பங்குனி உத்திரம்-30

Post  ishwarya Thu May 23, 2013 3:00 pm

. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட யஜூர் வேதத்தின் 7-வது காண்டத்தில் பங்குனி உத்திரத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன.

2. பங்குனி உத்திர முகூர்த்த நாளன்று சீதாராமனின் கல்யாணம் நடைபெற்றது என்று வால்மீகி ராமாயணமும் கூறுகின்றது. மிக மிகப் பழங்காலத்தில் இருந்தே பங்குனி உத்திரநாள் ஒரு சிறந்த நாளாகத் திகழ்ந்து வருவது தெளிவாகிறது.

3. தமிழகத்தில் நடைபெற்ற திருவிழாக்களில் மிகப்பழமையான விழா பங்குனி உத்திரம். இது உறையூரிலும், திருவரங்கத்திலும் நடைபெற்றதை அகநானூறு (பாடல் 137:5-11) குறிக்கிறது.

4. திருமயிலை கபாலீஸ்வரத்தில் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் நடைபெற்ற விழாக்களை திருப்பூம்பாலைத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் பாடியருளினார். இவற்றில் ஒரு திருவிழா பங்குனி உத்திரம். (பாடல் 7)

5. பங்குனி உத்திரம் அன்று சில கோவில்களில் சுவாமிகளுக்கு நீர்த்தவாரி உற்சவம் நடத்துவார்கள். முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலங்களில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது.

6. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்ëறான பழனியில் பங்குனி உத்திரம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விரதம் இருந்து அன்று பழனியாண்டவரை வழிபடுவார்கள்.

7. பங்குனி உத்திர விழா வரும் காலம் கோடைகாலமாக இருப்பதால் அன்றைய தினம் கோவில்களில் பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்-மோர் வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்கிறார்கள். வாழ்க்கையில் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள். பக்தர்களுக்கு நீர்-மோர் மற்றும் பானகம் வழங்குவது நல்லது. அவ்வாறு செய்வது மன நிம்மதியை தரும்.

8. 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவி தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக அமையும்.

9. பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

10. மகாலட்சுமி இந்த விரதத்தை கடைபிடித்து விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.

11. இந்த விரதத்தை கடைபிடித்துதான் தேவர்களின் தலைவனா இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவியான சரஸ்வதியையும் பெற்றார்கள்.

12. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.

13. அழன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கு உகந்தநாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

14. ஆலகால விஷத்தை உண்ட பரமனுக்கும் பார்வதிக்கும் பங்குனி உத்திரத்தன்றுதான் திருமணம் நடந்தது.

15. லங்கேஸ்வரனை வென்ற ஸ்ரீராமருக்கும் சீதாதேவிக்கும், பங்குனி உத்திரத்தன்றுதான் திருமணம் நடந்தது. அது மட்டுமல்ல, ஸ்ரீராமரின் சகோதரர்களுக்கு திருமணம் நடந்தது இந்நன்னாளில்தான்.

16. உவமையற்ற வில்வீரன் அர்ஜூனனுக்கு `பல்குணன்' என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.

17. ஊன் உறக்கமின்றி கண் இமையால் நம்மைக்காக்கும் `இமையவர்கள்' என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.

18. பங்குனியில் மரங்களும், செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்ளன. தமிழ் நூல்கள் இம்மாதத்தை பங்குனிப்பருவம் என்றும் இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவை பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

19. நலம் வளங்களை தருவது சிவன். அதுவும் பங்குனி உத்திர நல்லநாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பக்தி வரலாறும் புராணங்களும் சொல்கின்றன.

20. கோதைபிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவமாகும்.

21. மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வ மாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்த வாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

22. அலைமகள் என்ற திருநாமத் தோடு கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலட்சுமியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

23. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டியில் பங்குனி உத்திரத்தன்று, நீராடி, ஆறுமுகநயினாரை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

24. மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை முருகன் கோயில். இங்குள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின் இங்கு கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு வரும் என்பது நம்பிக்கை.

25. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

26. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.

27. பங்குனி உத்திரம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் சிறப்பாக நிடைபெறும்.

28. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

29. திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினி அம்பாளுக்கு குளிர்ந்த சந்திரன் நெற்றிக்கண்ணாக இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வந்தால் இந்த அம்பாள் மனோபலமும் தருபவள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளைபூஜை செய்துவழிபட்டால், மாணவர்கள் பேச்சுத்திறமையிலும் கல்வியிலும் சிறந்து விளங்குவர்.

30. சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum