தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி உத்திரம்

Go down

பங்குனி உத்திரம் Empty பங்குனி உத்திரம்

Post  meenu Sun Mar 24, 2013 2:49 pm

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

* முருகன் - தெய்வயானை திருமணம்
* ஸ்ரீராமர் - சீதை திருமணம்
* சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம்
* ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்
* ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாள்
* அர்ஜூனன் அவதார நாள்
* சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்

முருகன் தெய்வயானை திருமணம்......

இத்திருமண நாள் பங்குனி உத்திர நன்னாளில் நடந்தது. பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமர் - சீதை திருமணம்.........

ராமன் சீதையை பாணிக்கிரஹனம் செய்து கொண்டு தீவலம் வந்தான். பின்னர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தனர். செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முனிவர்களையும் தந்தையையும் வணங்கி "ப்ரவிச்ச ஹோமம்'' என்ற சடங்கை செய்து, பின்னர் ராமனும் சீதையும் தம்மாளிகையினுள் புகுந்தனர். இவ்வாறு ராமபிரான் - சீதா பிராட்டி திருமணம் பங்குனி உத்திர திருநாளன்று சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ ராம நவமி தினத்தில் செய்ய வேண்டியவை.........

சிலர் பத்து நாட்களுக்கு முன்பே ராமாயணம் படிக்க ஆரம்பித்து, ராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்வார்கள். சாதாரணமாக தினமும் செய்யும் உணவை தயாரித்து பஞ்சாமிர்தம், பானகம், நீர் மோர் இவைகளை அதிகப்படியாக தயார் செய்து அதை நிவேதனம் செய்ய வேண்டும்.

அதர்மங்கள் ஒழிந்து நன்மைகள் பெருக, மக்கள் குளிர்ந்த மனமும் நிறைந்த வயிறுமாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ராமன் அவதரித்ததாக கூறுவார்கள். ஆகவே தான் அன்று எளிய பானமான பானகம், நீர் மோர் முதலியன நிவேதனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

மன்மதனை எழுப்பித் தந்த நாள்.........

காமன் - சிருஷ்டி தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன். இவனது தேவி ரதியாவாள். காமன் ரதியைப் பிரிந்து வந்து, சண்முக அவதாரம் ஏற்படுவதற்காக தட்சிணாமூர்த்தி சொரூபமாக நின்ற பரமேஸ்வரன் மீது மலர் அம்புகளை ஏவ, அவரது கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய அக்னியால் சாம்பலானான்.

இதுவே காமதகனம் எனப்படுகிறது. காமதகனம் நடந்ததை கேள்விப்பட்டு ரதி பதறி ஓடி வந்து சிவபெருமானை வணங்கி வேண்ட, காமன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான். ரதியின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் சக்தியை பெற்றான்.

காமதகனம் நடைபெற்ற இடம், தமிழ்நாட்டிலுள்ள திருக்குறுங்கை. இந்த ஊரில் உள்ள குளத்தின் அடிப்பகுதி சாம்பல் மயமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். மன்மதன் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்த நாள் பங்குனி உத்திர திருநாளாகும். காமதகனத்தன்று மன்மதன், ரதி தம்பதிகளை வழிபடுவோர் சிவபெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தை அடைவர்.

அர்ஜூனன் அவதார நாள்...........

பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜூனன். பத்துவித பெயர்களை உடையவன் அவன். கூர்மையான பார்வையை உடையவன். நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான். கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்தான். கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜூனன். எனவே அர்ஜூனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்.........

சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும். ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள். பலி விழாப் பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்ற திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.

சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள். விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

சிறப்பு பலன்கள்......

1. பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

2. பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

3. பங்குனி உத்திரத்தன்று சுவாமி கடல், ஏரி, கடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார். அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum