பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா: 1 லட்சம் பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்
Page 1 of 1

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வனப்பகுதியை யொட்டி உள்ளது புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவில். ஆண்டு தோறும் பங்குனி மாதம் பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி சப்பரத்தில் அம்மன் ஒவ்வொரு கிராமத்திலும் வீதி உலா வந்தது. பக்தர்கள் சப்பரத்தின் முன் படுத்தப்படி அம்மனை வழிப்பட்டனர். மேலும் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் விஷேச பூஜைகள் நடந்தது. விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இன்று இரவு குண்டத்தில் டன் கணக்கில் விறகுகள் போட்டு குண்டம் வார்க்கப்படுகிறது. குண்டத்துக்காக பக்தர்கள் டன் கணக்கில் விறகுகளை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். நாளை அதிகாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது.
முதலில் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன் பிறகு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வைக்கப்பட்டு அதை சுமந்து முதலில் பூசாரிகள் குண்டம் இறங்குகிறார்கள்.
இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள். முக்கிய பிரமுகர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பக்தர்களும் தீ மிதித்து பண்ணாரியம்மனை வழிபடுகிறார்கள்.
ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, சென்னை உள்பட தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். பக்தர்கள் தீ மிதித்த பிறகு அதே குண்டத்தில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளும் குண்டம் இறங்குவது விசேஷ நிகழ்ச்சியாகும்.
குண்டம் விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பண்ணாரியில் குவிவதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கோடைகாலம் நிலவுவதையொட்டி பண்ணாரி பகுதியில் யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் ரோட்டில் நடமாடுகிறது. வன விங்குகளால் பாத யாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு ஏதும் ஆபத்து நடக்காமல் இருக்க வனத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா: 1 லட்சம் பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்
» பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: மறுபூஜையுடன் நிறைவு
» பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா
» பேசும்பெருமாள் கோவிலில் 108 கோ பூஜை விழா
» திருப்பதி கோவிலில் நாளை யுகாதி ஆஸ்தான பூஜை: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum