கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா துவக்கம்
Page 1 of 1

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 18 நாள் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கினர். இன்று மாலை கிராம மக்கள் சார்பில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை சந்தனுசரிதம் இரவு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி 23ம் தேதி நடக்கிறது. அன்று மாலை தாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வந்து திருநங்கைகள் கலந்து கொள்வர்.
வரும் 24ம் தேதி காலை திருத்தேர் நிகழ்ச்சியும், மாலையில் தாலியை அறுத்து, ஒப்பாரி வைத்து அழுவார்கள். பின்னர் தலைமுழுகி வெள்ளை புடவை அணிந்து சோகமாக தங்களது ஊருக்கு செல்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், கிராம மக்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
» கூவாகம் கூத்தாண்டவர்
» ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» அல்லி நகரம் அய்யனார் கோயிலில் இன்று அன்னக்கொடியும் கொடிவீரனும் துவக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum