தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

Go down

சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம் Empty சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

Post  ishwarya Thu May 23, 2013 12:51 pm

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகரமாக கள்ளழகர் தங்க குதிரையில் பச்சை பட்டு அணிந்து வைகை ஆற்றில் இறங்கினார். வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் அலைமோதியது. மதுரை மீனாட்சி கோயிலில் ஏப்ரல் 14-ல் சித்திரை முதல் நாள் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையின் “அரசி’’ மீனாட்சியின் பட்டாபிஷேகம் 21-ந் தேதி, 23-ந் தேதி திருக்கல்யாணம், மறு நாள் தேரோட்டமும் சிறப்புற நடந்து முடிந்தது.
அடுத்து 7 நாள் அழகர் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. அழகர் மலையில் குடிகொண்டுள்ள சுந்தரராஜப் பெருமாள், கண்டாங்கிப்பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளர் வேடத்துடன் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்து சேர்ந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்திருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலுக்கு வந்து, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். இதன் பிறகு தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குப் புறப்பட்டார். அழகரை வரவேற்க ஆற்றில் வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் காத்திருந்தார்.

வழி நெடுகிலும் 410 மண்டகப்படிகளில் தோன்றிய அழகர் காலை 7.35 மணிக்கு மின்னியபடி தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணை முட்டியது. கோவிந்தா! கோவிந்தா!! என பக்தி கரகோஷத்துடன் சூடம் ஏற்றி வழிபட்டனர். ஆற்றில் அமைக்கப்பட்டு இருந்த மண்டபத்தில் அழகரை வீரராகவ பெருமாள் சுற்றி வலம் வந்த திருக்காட்சி நடந்தது. அங்கிருந்து 8.40 மணிக்கு அழகர் மீண்டும் புறப்பட்டு வைகை கரை ஓரமாக வண்டியூர் சென்றார். ஆற்றில் இறங்கிய அழகரை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வந்த அழகர் மீண்டும் 29-ந் தேதி சென்றடைகிறார். போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையிலிருந்து 700 மில்லியன் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பச்சை பட்டு மகிமை

அழகர் ஆற்றில் இறங்கும்போது அணிந்திருக்கும் பட்டுக்கு தனி மகிமை உண்டு. அதன் நிறத்தை வைத்து, இந்த ஆண்டின் செழிப்புக்கு பக்தர்கள் ஆரூடம் கணிப்பது நம்பிக்கை. நேற்று அழகர் பச்சை பட்டு அணிந்திருந்ததால், செழிப்பு என்று மகிழ்ந்தனர். ஆனால் சிலர் கடந்த ஆண்டும் பச்சை பட்டு தானே? என்கின்றனர். இது குறித்து ஆரூடம் கணிக்கும் பக்தர் கூறும்போது, “கடந்த தமிழ் நந்தன ஆண்டு. அது வறட்சியாக தான் இருக்கும். இந்த ஆண்டு செழிப்புக்கு முன்னோட்டமாக அழகர் மதுரைக்குள் வந்ததும் மழை கொட்டியது. எனவே பருவ மழை பொழியும் செழிப்பு ஏற்படும்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum