தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குரு கொடுக்கும் யோகங்கள்

Go down

குரு கொடுக்கும் யோகங்கள் Empty குரு கொடுக்கும் யோகங்கள்

Post  ishwarya Thu May 23, 2013 11:35 am

குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்கலில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

4) ஹம்சயோகம் : சந்தினுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

"வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!''
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum