தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அட்டாங்க யோகங்கள்

Go down

அட்டாங்க யோகங்கள் Empty அட்டாங்க யோகங்கள்

Post  amma Sat Jan 12, 2013 1:44 pm


இயமம்: கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை) புலன் அடக்கம் என்பனவாம்.

நியமம்: தவம், மனத்தூய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.

ஆதனம்: பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறி ருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல்.

பிராணாயாமம்: பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச் செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்). இதுவும் இரண்டு வகைப்படும்.

அகற்பம்: மந்திரமில்லாது நிறுத்தல். 2 சகற்பம் பிரணவத்துடன் காயத்திரி மந்திரத்தை, உச்சரித்து நிறுத்தல். பிராத்தியாகாரம்: மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.

தாரணை: உந்தி, இதயம், உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; இதற்கு `முழங்கால், குதம், இதயம், கண்டம், கபாலம்` என்னும் ஜந்து இடங்களிலும் ஜம்பூதங்களை (நிலம், நீர், தீ, காற்று, வானம்) ஆகியவைகளையும் ஒடுக்கி அவ்விடங்களில் முறையே பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகே சுரன், சதாசிவன் என்னும் பஞ்ச மூர்த்திகளையும் இருத்திப் பாவித்தல் எனவும் கூறுவர்.

தியானம்: ஜம்புலத்தையும், அந்தக் கரணத்தையும் அடக்கி, ஒரு கரத்து மழுவும் ஒருகரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங்களையுடையனவாய் சதுர்ப் புயம், காளகண்டம், திரிநேத்திரம் உடையனவாய் விளங்கும் சிவ மூர்த்தியைத் தியானித்தலாம்.

சமாதி: ஓரிடத்தேனும் மந்திரத்தோடு நோக்காமல் எங்கணும் சிவவியாபகமாய், நோக்கி, அவ்வஸ்துவையும், தன்னையும் பிரிவறப் பொருத்துதல். இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum