குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்
Page 1 of 1
குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்
நல்ல நிலையில் மகிழ்ச்சியாக வாழும் மனிதனைப் பார்த்து அவனுக்கென்ன ராஜயோக ஜாதகக்காரன் என்று சிலர் கூறுவார்கள் அது என்ன யோகம்ப யோகம் என்றால் பலவற்றை ஒன்று கூட்டுவது என்று பொருள். பல கிரகங்கள் ஒன்று கூடி ஜாதகக் கட்டங்களில் அமர்ந்து நற்பலன்களை ஜாதகனுக்கு அளிப்பதால் அச்சேர்க்கை யோகம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டது. கிரகங்களின் கூட்டணி ஆட்சிக்கு ஏற்ப சுமார் 300-க்கும் மேற்பட்ட யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருவின் தொடர்புடைய சில யோகங்கள்:
1. அஷ்டலட்சுமி யோகம்,
2. கஜ கேசரி யோகம்,
3. அதி யோகம்,
4. குருசண்டாள யோகம்,
5. அகண்ட சாம்ராஜ்ய யோகம்,
6. ஹம்ஸயோகம்.
1. அஷ்டலட்சுமி யோகம்: ஒரு ஜாதகரின் ஜாதகத்தில், ராகு ஆறில் இருக்க குரு எனும் வியாழன் கேந்திரத்தில் இருப்பாரேயானால் அவருக்கு அஷ்டலட்சுமி யோகம் உள்ளது. இதனால் அந்த ஜாதகன் அஷ்டலட்சுமிகளின் அருள் கடாட்சம் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களும் பெற்று ராஜபோகத்துடன் வாழ்வாங்கு வாழ்வார்.
2. கஜகேசரி யோகம்: கேசரியோகம் அல்லது கஜகேசரியோகம் என்பது ஓர் விசேஷ யோகமாகும் சந்திரனுக்கு ஏதேனும் ஓர் கேந்திரத்தில் 1, 4, 7, 10 ஆம் இடத்தில் குரு பகவான் இருந்தால் அந்த ஜாதகர் கஜ சேகரியோகம் உடைய ஜாதகராவார். அதனால் நல்ல பெயரும், பெரும் புகழும் நீண்ட ஆயுளும் பேச்சாற்றலும், பகைவர்களை எளிதில் வெல்லும் திறனும் நிறைந்த செல்வ வளமும் அந்த ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும்.
3. அதியோகம்: சந்திரனுக்கு 6, 7, 8ஆம் வீடுகளில் சுபக்கிரங் களில் ஆன குரு புதன் சுக்கிரன் போன்றவர்கள் ஒன்று கூடியிருந்தாலோ, அல்லது தனித்தனியே அமர்ந்திருந்தாலோ இந்த சேர்க்கைக்கு அதியோகம் என்று கூறுவார்கள். இது ஒரு அரசு அதிகாரிகளாகவும், தனியார் துறையென்றாலும் அதிலும் மிகப்பெரிய பதவிகளிலும், சிறு தொழில் குறுந்தொழில், பெருந்தொழில் துறைகளில் தலைமை நிலையிலும், மக்களுக்கு பொதுச்சேவையாற்றும் பெரிய சமூக சேவர்களாகவும் இருப்பார்கள். நல்ல செல்வம் உடையவர்களாகவும் திகழ்வார் கள். பிறந்த லக்னத்திற்கு 6,7,8 ஆம் இடங்களில் இதுபோன்று சுபக்கிரகங்கள் இருந்தால் அதுவும் லக்ன அதியோகம் எனப்படும். இதுவும் மேற்கண்டவாறே பலன்கள் தருவதாக இருக்கும்.
4. குரு சண்டாள யோகம்: ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள குருவோடு சனி, ராகு, கேது போன்ற கிரகங்களில் சேர்க்கை ஏற்பட்டிருந்தால் அது குருசண்டாள யோகம் எனப்படும். இந்த யோக ஜாதகர் உயர்குடியில் நல்ல நிலையில் பிறந்திருப்பார். என்றாலும், இனப்பற்று, மதப்பற்று, கடவுள் பக்தி இல்லாதவராக ஓர் சண்டாளன் போலவே நடந்து கொள்வார். இது நற்பலன்கள் தரும் யோகமல்ல.
5. அகண்ட சாம்ராஜ்ய யோகம்: ஒருவருடைய ஜாதகத்தில் 2, 9, 11-க்குடைய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பலமாகி நிற்க அதோடு குரு பகவான் 5-க்கோ அல்லது 10-க்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் அந்த ஜாதகர் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உடையவராவார். இதனால் நீண்ட ஆயுள், உயர்நிலைக் கல்வி, பட்டம் பதவிகள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து போன்றவற்றைப் பெற்று நல்ல பேரும் புகழும் கொண்டவர்களாக வாழ்வார்கள்.
6. ஹம்ஸ யோகம்: பத்ர யோகம், ருசக யோகம், சக யோகம், ஹம்ஸயோகம், மால்வ்ய யோகம் என விசேஷமாக 5 யோகங்கள் உண்டு. இவற்றிற்கு பஞ்சமகா புருஷ யோகம் என்பது பொதுப்பெயராகும். இவற்றுள் ஒன்றுதான் மேற்கண்ட ஹம்ஸ யோகம் என்பது குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நின்றால் அதுவே ஹம்ஸ் யோக ஜாதகமாகும். இந்த யோக ஜாதகன் நல்ல பெயரும் புகழும் பெற்று நாட்டில் பிரபலமான மனிதராக, செவ்வந்தராக வாழ்வார்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்
» குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்
» அட்டாங்க யோகங்கள்
» குரு கொடுக்கும் யோகங்கள்
» குருகுரு குரு குரு குரு
» குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்
» அட்டாங்க யோகங்கள்
» குரு கொடுக்கும் யோகங்கள்
» குருகுரு குரு குரு குரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum