தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்

Go down

தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்  Empty தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்

Post  ishwarya Wed May 22, 2013 12:02 pm

திப்பை குறைக்கும் குணமும் வெந்தயத்துக்கு இருக்கிறது. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், ஆண் ஹோர்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சிநடத்தப்பட்டது.



நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 25 வயது முதல் 52 வயது வரை உள்ள 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என 45 நாட்களுக்கு அவர்களுக்கு வெந்தயச்சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹோர்மோன் அளவு, தாம்பத்திய உறவில் ஆர்வம் ஆகிவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு பிரிவினருக்கு வெந்தயம் அல்லாத வெறும் சாறு கொடுக்கப்பட்டது.



வெந்தயச் சாறு குடித்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள், ஹோர்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. வெறும் சாறு குடித்தவர்களின் ஹார்மோன் உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum