தெரிந்த கதை,தெரியாத பெயர்கள்!
Page 1 of 1
தெரிந்த கதை,தெரியாத பெயர்கள்!
பகவான் கிருஷ்ணரைப்பற்றி அறிவோம். ஆனால், அவருக்கு முன்பாக பிறந்த குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பதையும் அறிந்து கொள்வோமா? இந்த ஆறு குழந்தைகளைப்பற்றி ஸ்ரீமத் பாகவதம், தசம ஸ்கந்தத்தில் 85வது அத்தியாயம் தெரிவிக்கிறது. இவர்கள் ஆறுபேரும் முதல் மன்வந்தரமான ஸ்வயம்புவ மன்வந்தரத்தில் மரீசி மகரிஷிக்கும், ஊர்ணை என்பவளுக்கும் தேவாம்சமாகப் பிறந்தார்கள். பிறகு, பிரம்மாவின் சாபத்தினால் ஹிரண்யகசிபுவிற்கும் புத்திரர்களாக பிறந்தனர். அதற்குப் பிறகுதான் பகவானின் யோக மாயையின் மூலமாக தேவகிக்கு குழந்தைகளாகப் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டார்கள். பிறகு, இந்த ஆறு ஜீவன்களும் மகாபலிச் சக்ரவர்த்தியின் வசத்திலிருந்த பாதாள லோகத்தில் இருந்து வந்தனர்.
இவர்களின் பெயர்கள் முறையே ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், க்ஷுத்ரபிருத், க்ருணி என்பவை ஆகும். தேவகி இவர்களைப்பற்றி நினைத்து வருந்தியதைக் கண்ட கிருஷ்ண பகவான் மகாபலியிடம் சென்று அவனால் மிகவும் உபசரிக்கப்பட்டும், ஆராதிக்கப்பட்டும் மரியாதை செய்யப்பட்டார். அவர் மகாபலியிடம் தனது தாயின் துயரத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு இந்த ஆறு சகோதரர்களையும் தமது தாயார் தேவகியிடம் அழைத்து வந்தார். தேவகி குழந்தைகளை உச்சி முகர்ந்து மகிழ்ந்தாள். கம்சனின் மனைவிகளான அஸ்தி, பிராப்தி எனும் இருவரும் ஜராசந்தனின் மகள்கள் ஆவார்கள். கிருஷ்ணர் கம்சனை கொன்றதால் வெகுண்ட ஜராசந்தன், மதுரா மீது பலமுறை படையெடுத்து மதுராபுரி மக்களுக்குத் தொல்லையளித்து வந்தான்.
கிருஷ்ணரால் ஜராசந்தனை எளிதில் கொன்றிருக்க முடியும். இருப்பினும் அவன் பீமசேனன் கையால் மடிய வேண்டும் என்று இருந்ததால், புதியதாக துவாரகாபுரியை உருவாக்கி தமது குடிமக்களை அங்கே குடியேற்றினார். ருக்மிணி விதர்ப்ப நாட்டு அரசனான பீஷ்மகரின் புதல்வி. இவருக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் முறையே ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி ஆகும். ஜோதிட சாஸ்திரம் யாரால் இயற்றப்பட்டது தெரியுமா? ஸ்ரீமத் பாகவதம், தசம ஸ்கந்தம், எட்டாவது அத்தியாத்தில் 5வது ஸ்லோகம் விவரிப்பதைப் பார்ருங்கள்:
“ஜயோதிஷாமயநம் ஸாக்ஷாத் யத்தஜ்ஞ ஞானமதீந்த்ரியம்
ப்ரணிதம் பவதாயோர புமாந் வேத பராவரம்,”
யாதவ குலத்தினரின் புரோகிதரும், பெரும் தவசியுமான கர்க்காச்சாரியார்தான் ஜோதிட சாஸ்திரத்தை இயற்றியதாக நந்தகோபர் சொல்கிறார். “ஒளி மண்டலங்களான சூரியன் முதலானோரின் விஷயங்களும், புலனறிவிற்கு அப்பாற்பட்ட ஜோதிடம் என்கிற விஞ்ஞானம், கர்க்காச்சாரியாரான உங்களால் தொகுக்கப்பட்டது. அதனால் மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டதையும், முற்பிறவியில் செய்த வினைப் பயன்களான புண்ணிய பாவங்களையும் இப்பிறவியில் அவற்றினால் பெறப்போகும் இன்ப, துன்பங்களையும் அறிய முடிகிறது.’’ இதைச் சொன்ன நந்தகோபர் கர்க்காச்சாரியரிடம் ‘‘பலராமன், கிருஷ்ணன் இவர்களுக்கு ஜாதக கர்மாக்களை செய்து வையுங்கள்” என்கிறார்.
அக்ரூரர் பகவான் கிருஷ்ணரின் பரம பக்தர் என்பது தெரியும். அவரது பெற்றோர் யார் தெரியுமா? தந்தையின் பெயர் ஸ்வபல்கர், தாயின் பெயர் காந்தினி. மழையின்றி சிரமப்பட்டுக் கொண்டிருந்த காசி மாநகருக்குள் ஸ்வபல்கர் காலடி எடுத்து வைத்தவுடன் மழை பொழிந்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த காசிராஜன் தனது மகள் காந்தினியை ஸ்வபல்கருக்கு திருமணம் செய்து முடித்தான். தனது தந்தையைப் போன்றே நற்குணம் படைத்திருந்த அக்ரூரர் சென்ற இடங்களிலெல்லாம் மழை பொழியும். அங்கே துன்பமோ, மகாமாரி போன்ற தீமைகளோ நெருங்காது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
அநிருத்தன் கிருஷ்ணனின் பேரன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னனுக்கும், கிருஷ்ணரின் மைத்துனனான ருக்மியின் பெண்ணான ருக்மவதிக்கும் பிறந்தவன். ருக்மி கிருஷ்ணரை வெறுத்தாலும் தனது சகோதரி ருக்மிணியின் மீது பாசம் கொண்டிருந்ததால் தனது மகளை பிரத்யும்னனுக்குத் திருமணம் செய்து வைத்தான். மேலும் ருக்மவதி பிரத்யும்னனை தனது சுயம்வரத்தில் தேர்ந்தெடுத்து மாலையிட்டு விட்டாள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த ஊர்... தெரியாத சேதி...!
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த புராணம்... தெரியாத கதை!
» மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum