கண்வலியா கவனம் தேவை.
Page 1 of 1
கண்வலியா கவனம் தேவை.
கண் வலி என்பது ஒரு தொற்று வியாதியாகும். கண்கள் சிவந்து, கண்களில் இருந்து வெள்ளையான திரவம் வெளியேறுவதே கண்வலியின் அறிகுறிகள் ஆகும். கண் இமையின் உள்புறம் ஒரு உறுத்தல் ஏற்படும். கண்களில் இருந்து லேசாக வெள்ளை நிற திரவம் போன்று வெளியேறும். இதுவே கண் வலியின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்.
மேலும், கண்களில் நீர் வடிதல், தலைவலி, தூங்கியபின் கண்விழிக்கும் போது கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்கள் சிவந்து போதல், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம், கண் எரிச்சல், ஒளியைப் பார்க்கும் போது கண் கூசுதல் போன்றவை கண் வலியின் அறிகுறிகளாகும்.
கண் வலி என்றதும் வீட்டில் இருக்கும் பழைய கண் மருந்துகளை எடுத்துப் போட்டுக் கொள்ள கூடாது. காற்று மூலமாக கண்களில் பாக்டீரியாவோ அல்லது வைரஸோ பரவியதன் காரணமாகவே இந்த கண் வலி வருகிறது. கண் வலி ஏற்பட்டதும் மருத்துவரை அணுகி கண்ணுக்கான மருந்தினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
கண் வலி குணமாகும் வரை அந்த மருந்தினை தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. உங்கள் கண்களுக்கு ஏற்ற கண்ணாடிகளை பொருத்திக் கொள்வதும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும் வழியாகும். கண் வலி வந்திருக்கும் போது, ஒருவர் தான் பயன்படுத்தும் பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது.
தனியாக சோப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் கண்களை சுத்தம் செய்த பிறகும், கண்டிப்பாக கையை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். உங்கள் கண்களைத் துடைக்க வைத்திருக்கும் துணியை தனியாக வைத்துக் கொள்வதும், அதனை கிருமி நாசினி கொண்டு துவைப்பதும், பயன்படுத்திய பிறகு பாலிதீன் கவருக்குள் வைத்து அதனை அப்புறப்படுத்துவதும் மிகவும் சிறந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண் வலி கவனம் தேவை
» கல்லீரலில் கவனம் தேவை!
» கல்லீரலில் கவனம் தேவை!
» கூந்தலில் கவனம் தேவை
» மகப்பேறு காலத்தில் கவனம் தேவை..!
» கல்லீரலில் கவனம் தேவை!
» கல்லீரலில் கவனம் தேவை!
» கூந்தலில் கவனம் தேவை
» மகப்பேறு காலத்தில் கவனம் தேவை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum