குழந்தைகளுக்கு ஒரு 'கவசம்'!
Page 1 of 1
குழந்தைகளுக்கு ஒரு 'கவசம்'!
கடல் மற்றும் தாவர எண்ணைகளில் காணப்படும் 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்கள்', எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளைக் காக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குறைப்பிரசவத்தில் அல்லது எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் பின்னாளில் மாரடைப்பு, உடல் பாக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளில் சிக்காமல் 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்கள்' காக்குமாம்.
குழந்தைகளுக்கு அவற்றின் முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒமேகா மருந்துப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம், அவர்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மேற்கண்ட பாதிப்புகளைத் தவிர்த்துவிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வாளர் குழுவுக்கு, சிட்னி பல்கலைக்கழகத்தின் போடன் எடை அதிகரிப்பு ஆய்வு மையத்தின் மைக்கேல் ஸ்கில்டன் தலைமை வகித்தார்.
அவர் கூறுகையில், ''பிறப்பில் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, இதய நோய்ப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்'' என்கிறார். பிறக்கும் குழந்தைக்கான சராசரி எடையில் வெறும் 10 சதவீதமாக இருப்பது என்பது எடை குறைவான குழந்தை என்பதற்கு சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அளிக்கும் விளக்கம்.
இரு குழுவாகப் பிரிக்கப்பட்ட 616 குழந்தைகள் இது தொடர்பான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர் . அதில் ஒரு குழு குழந்தைகளுக்கு அவை புட்டிப் பால் அருந்தும் பருவத்தில் அல்லது ஆறு மாத காலத்தில் தொடங்கி ஐந்து வயது வரை தினசரி 500 மில்லி கிராம் மீன் எண்ணை மாத்திரை வழங்கப்பட்டது.
அக்குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட அளவு தாவர வெண்ணையும், சமையல் எண்ணையும் கூட கொடுக்கப்பட்டன. மற்றொரு குழு குழந்தைகளுக்கு, புட்டிப் பால் பருவம் தொடங்கி 5 வயது வரை தினசரி 500 மில்லிகிராம் சூரியகாந்தி எண்ணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு 'ஒமேகா 6 பேட்டி ஆசிட்' நிறைந்த தாவர வெண்ணைகளும், சமையல் எண்ணையும் கூட அளிக்கப்பட்டன.
இந்த இரு குழு குழந்தைகளுக்கும் அவர்களது எட்டு வயதில் ரத்தக் குழாய் சுவர் எந்த அளவு கெட்டியாகி உள்ளது என்று பரிசோதிக்கப்பட்டது. இதயநோய் பிரச்சினைக்கான அறிகுறியாகும் இது. சூரியகாந்தி எண்ணையை உணவுப்பொருளைப் பெற்றுவந்த குழந்தைகள், பிறப்பில் சிறியதாக இருந்திருந்தால் அவர்களின் ரத்தக் குழாய் சுவர்கள் தடிப்படைந்திருந்தன.
'ஒமேகா 3 பேட்டி ஆசிட்'களை பெற்றிருந்த குழந்தைகளுக்கு அவை தவிர்க்கப்பட்டிருந்தன. ''தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தினசரி 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்' கொடுப்பது பலனளிக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்வது அவசியம்'' என்று ஸ்கில்டன் கூறி முடிக்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum