காளஹஸ்தீஸ்வரருக்கு தங்க கவசம்
Page 1 of 1
காளஹஸ்தீஸ்வரருக்கு தங்க கவசம்
காளஹஸ்தீஸ்வரருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை கர்நாடக அமைச்சர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில், பஞ்சபூத தலங்களில் ஒன்றான, புகழ் பெற்ற வாயு லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் காளஹஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.
webdunia photo WD
மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை நேற்று காணிக்கையாக வழங்கினார். இந்த கவசத்தின் தலைப் பகுதியில் சூரியன், சந்திரன், அக்னியும், கீழே 9 படிகளில் நவ கிரகங்களும், 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. 9 கிரகங்களுக்கும் முத்து, பவழம், நீலம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம், ரூபி, எமரால்டு மற்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
நேற்று காலையில், இந்த தங்க கவசம் பூப்பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்து முடிந்த பிறகு இந்த தங்கக் கவசம் சார்த்தப்பட்டது.
ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருந்த தங்க முலாம் பூசிய 3 வெள்ளிக் கவசங்கள் மட்டுமே இதுவரை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருணாகர ரெட்டி, மகா சிவராத்திரியன்று சிவபெருமான் உலா வரும் நந்தி பகவானுக்கும் தங்க கவசம் செய்து காணிக்கையாக வழங்க இருக்கிறேன். மேலும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தங்கும் விடுதிகளும் கட்டித்தர இருக்கிறேன். இவை தவிர, எங்கள் பெற்றோர் பிறந்த ஊரான இந்த காளஹஸ்தியில் வாயுலிங்கேஸ்வரர் கோவில் முன்னேற்றப் பணிகளுக்காக எந்த நேரமும் நன்கொடை வழங்க, நானும் எனது சகோதரர் காலி ஜனார்த்தன ரெட்டியும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
கருணாகர ரெட்டியின் சகோதரரும், கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான காலி ஜனார்த்தன ரெட்டி, திருப்பதி ஏழுமலையானுக்கு 45 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கிரீடம் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் காணிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum