டீன் ஏஜ் அழகு குறிப்புகள்.
Page 1 of 1
டீன் ஏஜ் அழகு குறிப்புகள்.
டீன் ஏஜில் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் வேலை வேகமாக, அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் பருக்கள், சருமத்தில் எண்ணெய் வழிதல், வியர்வை போன்றவை இருக்கும். டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன தெரியுமா? தினமும் மாலையில் வீடு திரும்பியதும் கிளென்சிங் மில்க் கொண்டு முகத்தைத் துடைத்து சுத்தப் படுத்த வேண்டும்.
தினம் இரண்டு முறைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ வேண்டும். வியர்வை நாற்றம் இந்த வயதில் தவிர்க்க முடியாதது. உடைகள் கறைபடியும். இதற்கு நல்ல தரமான டியோடரண்ட் உபயோகிக்கலாம். இது உடல் நாற்றத்தைப் போக்கி, வியர்வையையும் கட்டுப்படுத்தும்.
டீன் ஏஜில் பெரும்பாலானவர்களைக் கவலைக்குள்ளாக்கும் விஷயம் பரு. ஹார்மோன் மாற்றங்கள், அதிக சீபம் சுரப்பது போன்றவற்றின் விளைவால் பரு தோன்றும். வாரம் இரண்டு முறை இவர்கள் முகத்துக்கான பேக் உபயோகிக்கலாம். டீ ட்ரீ ஆயில், கற்பூரம், கிராம்பு மாதிரி ஏதேனும் ஒன்று கலந்த பேக் ஆன்டிசெப்டிக்காகவும் வேலை செய்யும். அதிக எண்ணெய் பசையையும் நீக்கும். பருக்களையும் கட்டுப்படுத்தும். பருக்கள் இருப்பவர்கள் ஆண்களோ, பெண்களோ அவற்றை நகங்களால் கிள்ளக் கூடாது.
குளிப்பதற்கு இவர்கள் அதிகக் கொழுப்பில்லாத சோப் அல்லது ஆயில் ஃப்ரீ சோப் மற்றும் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். இது அவர்களது சருமத் துவாரங்களை அடைக்காமலிருக்கும்.
எண்ணெய் குளியல் என்பதை இந்தக் காலத்து டீன் ஏஜில் இருக்கும் அனேகம் பேர் அறிந்தே இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக வந்திருக்கிறது shower cream. எண்ணெய் கலந்த இந்த கிரீமை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் ஊறித் தேய்த்துக் குளிக்க வேண்டியதுதான். எண்ணெய் குளியல் எடுத்த எஃபெக்ட்டும் இருக்கும். ஷாம்பூ போட்டு குளித்த மாதிரிக் கூந்தலும் பளபளக்கும்.
பொடுகுப் பிரச்சினையும் இந்தப் பருவத்தில் பெரிதும் அவதி தரும். வாரம் மூன்று முறை ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிக்கலாம். இது தவிர மாதம் ஒன்றிரண்டு முறை தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். ஆனால் தலைக்குக் குளித்த பிறகு கட்டாயம் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது முக்கியம்.
இந்த வயதில் அதிகப் படியான மேக்கப்புக்குப் பழகுவது தேவையில்லாதது. டீன் ஏஜின் கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் சிம்பிளான மேக்கப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஆயில் ஃப்ரீ ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், லைட் ஷேடுகளில் லிப்ஸ்டிக், கண்மை போன்றவற்றை உபயோகிக்கலாம். முகத்தில் எண்ணெய் வழியாமல், பளிச்செனக் காட்சியளிக்க இதுவே போதும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டீன் ஏஜ் அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
» முக அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum