குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்
Page 1 of 1
குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்
குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.. பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.
குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.
‘அம்மா நான் நனைத்துவிட்டேன்’
பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.
‘அம்மா எனக்கு தூக்கம் வருதே’
வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.
‘அம்மா என்னை கொஞ்சம் எடுத்து கொஞ்சு’
சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.
‘அம்மா எனக்கு வாயு தொந்தரவு’
குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.
பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.
குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில் டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.
‘அம்மா எனக்கு பல் முளைக்கப்போகிறது’
பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.
அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும். காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காரணங்கள் காரணங்கள்
» வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!
» குடலிறக்கம் ஏற்பட காரணங்கள்
» இரத்தக் கொதிப்பிற்கான காரணங்கள்
» வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!
» வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!
» குடலிறக்கம் ஏற்பட காரணங்கள்
» இரத்தக் கொதிப்பிற்கான காரணங்கள்
» வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum