தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காரணங்கள் காரணங்கள்

Go down

 காரணங்கள் காரணங்கள் Empty காரணங்கள் காரணங்கள்

Post  meenu Thu Feb 28, 2013 2:50 pm

காரணங்களை துல்லியமாக, அறுதியிட்டு சொல்ல முடியாத வியாதிகளில் ஒன்று சர்க்கரை வியாதி. அதனால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். இவை தான் காரணங்களாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

பரம்பரை- (Heredity)

சர்க்கரை வியாதிகளின் (டைப் 1 மற்றும் டைப் 2) காரணம், பரம்பரை என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்லலாம். பெற்றோர்களில் இருவருக்கும் இருந்தால், உங்களுக்கும் கண்டிப்பாக வரும். நீங்கள் உஷாராக இருந்து தேவையான வருமுன் காக்கும் செயல்களை மேற்கொண்டால் தப்பிக்கலாம். கள்ளனை வீட்டில் வைத்திருப்பது போல் உங்கள் உடலில் பரம்பரை கோளாறு படுத்திருக்கும். அதுவும் டைப் 1 வியாதியில், வைரஸ், ஸ்ட்ரெஸ் (Stress), சுற்றுப்புற சூழ்நிலை மாசு (மருந்துகளுக்கும், இராசாயன பொருட்களுக்கும் ஆளாவது) இவைகளால் உடலின் உள் இருக்கும் கள்ளன் உசுப்பிவிடப்பட்டு சர்க்கரை வியாதி தலைதூக்கும். பரம்பரை டைப் – 1 ல் தான் இந்த உசுப்பல் தேவைப்படுகிறது, துப்பாக்கியால் சுட அதன் குதிரை (trigger) யை அழுத்துவது போல. பரம்பரை தாக்கம் இருந்தாலும் மிகச்சிலருக்கு மாறுபட்ட மரபணு (mutated gene), இளவயதிலேயே முதிர்ந்த டயாபடீஸை தோற்றுவிக்கும். டைப் -
2 டயாபடீஸில் பரம்பரை காரணம் வலுவானது.

தவிர மையோடோனிக் டிஸ்ட்ரோபி (Myotonic dystrophy/steinert disease) என்ற தீவிரமான தசை அழிவு நோய், நடமாட்டங்களை முடக்கும் ப்ரெடரிச் அடாக்ஸியா (Fried reich’s Ataxia) என்கிற பரம்பரை நோய்களின் அம்சம் டயாபடீஸ். கட்டுப்படுத்த முடியாத ஆட்டோஇம்யூன் (Auto immune) குறைகள் கணையத்தின் பீடா செல்களை அழித்துவிடும். சில ஆராய்ச்சிகளில் தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்த தன்னிச்சை எதிர்ப்பு சக்தி நோயை குறைக்கலாம். குழந்தைகளுக்கு அதன் வாழ்க்கையின் முதல் வருடத்தில் 2000 யூனிட் விட்டமின் டி கொடுத்துவந்தால் டைப் 1 டயாபடீஸ் வருவதை தடுக்கலாம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.

பெற்றோர் இருவரும் சர்க்கரை நோயாளிகளென்றால், பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக வரும். பெற்றோர் ஒருவருக்கு மட்டும் இருந்தால் பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 40 சதவீதம். பெற்றோரில் ஒருவருக்கும், நெருங்கிய உறவினரில் யாருக்காவது இருந்தாலும், பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 70 சதவிகிதம்.

உடல் பருமன் அதிகமாதல் (Obesity)

டயாபடீஸ் மட்டுமல்ல. ஏனைய பல வியாதிகளுக்கு அதிக உடல் எடையே காரணம். சொல்லப்போனால் அதிக உடல்பருமனும் பரம்பரையாக வரலாம். டைப் – 2 நீரிழிவு நோய் அதிக உடல் எடையால் வரும். தவிர தைராய்டு ஹார்மோன் கோளாறுகள், உடற்பயிற்சி / உடலுழைப்பு இல்லாதவர்கள், பெருந்தீனி ஆசாமிகள் இவைகளும் காரணம். ஒரு கிலோ எடை கூடினால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 5 சதவிகிதம் அதிகமாகிறது. டைப் – 2 நீரிழிவு நோயாளிகளில் 80 லிருந்து 90% குண்டாக இருப்பவர்கள். அதிகமாக சாப்பிட்டால் உடல் செல்கள் விரிவடைந்து பெரிதாகுகின்றன. தவிர உடற்பருமனால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகும். எனவே குண்டானவர்களுக்கு அதிக இன்சுலின் தேவை. இது கிடைக்காமல் போனால் டயாபடீஸ் உருவாகும்.

வயது

டயாபடீஸ் டைப் – 2 நடுவயதில் ஆரம்பிக்கும். நாற்பது வயதில் வரும் சர்க்கரை வியாதி இப்போது 25 வயதிலேயே வரும் சாத்ய கூறுகள் அதிகம்.

உடற்பயிற்சி உடலுழைப்பு இல்லாதவர்கள்

தினம் உடற்பயிற்சி செய்பவர்கள், எடையை குறைப்பவர்கள், ஆரோக்கிய உணவை உண்பவர்கள் இவர்களால் டயாபடீஸ் நோயை ஓரம் கட்ட முடியும். ஆனால் சோம்பேறிகளாக, உல்லாச வாழ்க்கை வாழ்பவர்கள் ஒன்றின் பின் ஒன்றாக பல பிணிகளுக்கு ஆளாகின்றனர். சாப்பிடும் உணவு கொழுப்புகள் செரிமானமாகாமல் உடல் எடையை அதிகரிக்கின்றன. பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பை தேங்க விடும். கூட ரத்த அழுத்தமும் அதிகமாகும். கெடுதலான கொலஸ்ட்ரால் கூடி நன்மை செய்யும் எச்.டி.எல் (HDL) குறையும். கூட புகைபிடிக்கும் பழக்கம், மதுவுக்கு அடிமையாகுவது இவையும் இருந்தால், “நீரிழிவு” தேடி வரும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனும் பிட்யூடரி சுரப்பு

கோளாறுகளால் பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளால், டயாபடீஸ் வரும் ஆபத்துள்ளது. உடல் உழைப்பு இல்லாத, மூன்று கிலோவுக்கு மேல் அதிக எடையுள்ள குழந்தையை பெற்ற, கர்ப்ப காலத்தில் சர்க்கரை வியாதியால் பீடிக்கப்பட்ட பெண்மணிகளுக்கு சர்க்கரை நோய் வரும். சில கருத்தடை மாத்திரைகளும் சர்க்கரை நோயை உண்டாக்கும். குடும்பத்தில் டயாபடீஸ் இருந்தால், கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் முன் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதுவும் குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் அடிக்கடி கருக்கலைப்பு (abortion) செய்து கொள்ளும் பெண்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம்.

மன வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள்

மனநோய்களுக்கான மருந்துகள் சாப்பிடுவர்கள், stress, அடிக்கடி கவலைப்படுபவர்கள், சத்துக்குறைவால் பலவீனமானவர்கள், ஸ்டிராய்டு மருந்துகளை நீண்டகாலம் உட்கொள்பவர்கள். இவர்களெல்லாம் டயாபடீஸ் வரும் வாய்ப்புகள் உள்ளவர்கள்.

ஒரு ஆராய்ச்சி, உயர்ரத்த அழுத்தம் உள்ள பெண்மணிகளுக்கு, சர்க்கரை வியாதி வரும் அபாயம், மற்றவர்களை விட 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum