தூக்கமின்மையில் இந்தியர்கள்
Page 1 of 1
தூக்கமின்மையில் இந்தியர்கள்
இந்தியாவில் 93 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை குறைபாடு இருப்பதாக நீல்சன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் போன்ற நாடுகளில் மருத்துவத்துறையில் இதயம் நுரையீரல் போல் இதற்கும் தனியாக சிறப்புத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போதுதான் இந்த தூக்கமின்மை பிரச்சினை குறித்து தூக்க மருந்தியல் என்ற துறை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக இருக்கம் ஒருவர் 6 முதல் 8 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும். 8 மணி நேரம் தூங்க முடியவில்லை என்று வருபவர்கள் முதல் வகை. நன்றாக தூங்குகிறோம். ஆனால் காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கலாம் என்று தான் தோன்றுகிறது.
தூங்கிய நிறைவே இல்லை என்று வருபவர்கள் இன்னொரு வரை தூக்கத்தின் நடுவே நிறைய முறை எழுந்து கொள்வபர்கள் 3-வது வகை. இதற்கு அடுத்த வகையினர் அசாதாரணமானவர்கள். தூக்கத்தில் நடப்பது , சாப்பிடுவது, போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள். ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.
தூக்கமின்மைக்கு முக்கியமான ஒரு காரணம் ஸ்லீப் ஆப்னியா எனப்படும் சுவாசப்பகுதியிலுள்ள தசைகள் கூடுதலாக விரிவதால் வரும் குறட்டை பிரச்சனை அதிகப்படியான குறட்டை மட்டுமல்லாது சீராக சுவாசிக்க முடியாமலும் சிலர் அவதிப்படுவார்கள். தூங்கும் போது குறட்டை வருபவர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் டூளைக்கு போகாது.
இதனால் நுத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு பக்கவாதம் வரலாம். ஒபீசிட்டி எனப்படும் அதிக உடல் எடை வேலையில் ஏற்படும் மனஅழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவவை தூக்கமின்மை வேறு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.
எல்லா வகையானது தூக்கமின்மையும் மருந்தினால் சரி செய்ய இயலாது என்பதோடு பல ஆண்டுகள் பிரச்சனைகளோடு இருந்து விட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம். குறிப்பாக ஆப்னீயாவை சீஎப்மிசின் என்ற கருவி உள்ளது. இரவில் இதை பயன்படுத்தும் போது குறட்டையினால் ஏற்படும் சுவாசப்பிரச்சனை இருக்காது.
பில்ப்ஸ் ஹெலத்கேர் நீல்சன் நடத்திய ஆய்வு முடிவுகள்..........
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முக்கிமான 25 நகரங்களை சேர்ந்த 35 முதல் 60 வயது வரை உள்ள 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்கமின்மையால் அவதிப்படும் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள்.
58 சதவீதம் பேருக்கு தூக்கமின்மையால் வேலை பாதிக்கப்படுகிறது. 11 சதவீதம் பேர் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கின்றனர். 11 சதவீதம் பேர் வேலையின் போதே தூங்கி விடுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட 62 சதவீதம் பேருக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வரும் சாத்தியம் அதிகம் இருந்தது.
ஆனால் இது ஒரு பிரச்சனை என்பதை உணர்ந்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவபர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே தூக்கமின்மையும் ஒரு நோய் தான். அதை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சுவாச நோய்கள் மட்டுமல்ல, மனநோயையும் தவிர்க்க முடியாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புகழ்பெற்ற இந்தியர்கள்
» இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?
» நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்
» இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்: கிறிஸ்கெய்ல்
» குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
» இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?
» நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்
» இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்: கிறிஸ்கெய்ல்
» குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum