தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருவிலேயே புத்திசாலியான குழந்தையை உருவாக்கலாம்

Go down

கருவிலேயே புத்திசாலியான குழந்தையை உருவாக்கலாம் Empty கருவிலேயே புத்திசாலியான குழந்தையை உருவாக்கலாம்

Post  meenu Thu Jan 24, 2013 1:47 pm

நம் நாட்டில் உள்ள பெற்றோர் அனைவரும் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை நல்ல நிறம், உயரம், அழகு, புத்திசாலித்தனம், நோயற்ற தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்படுவது போல் எல்லா குழந்தைகளும் பிறப்பதில்லை.

அழகு இருந்தால் புத்திசாலித்தனம் இருப்பதில்லை. புத்திசாலித்தனம் இருந்தால் அழகு இருக்காது. ஒரு வேளை இரண்டும் இருந்தால் அக்குழந்தை தீராத நோயால் கடுமையாக அவதிப்படும். எனவே இதை போக்க மருத்துவ விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தார்கள்.

அதில் தற்போது வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். இனி நாம் என்ன மாதிரியான குழந்தையை பெற விரும்புகிறோமோ அதே போல நவீன சிகிச்சை மூலம் மிக சிம்பிளாக பெற்றுக் கொள்ளலாம். இதை கேட்கும் போது உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், சோதனை குழாய் குழந்தை மாதிரி செயற்கை கருத்தரிக்கும் முறையில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.

இந்த புதிய செயற்கை கருத்தரிப்பு முறையின் பெயர் "டிசைனர் பேபி''. இந்த முறையில் கருவுயிரில் உள்ள செல்களில் ஓரிரு மாற்றம் செய்து நாம் விரும்பும் வகையில் குழந்தைகளை உருவாக்கி வியக்க வைத்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

டிசைனர் பேபி முறையில் குழந்தை பெற விரும்புபவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று, `குழந்தையின் உடல் நிறம், கண் நிறம், முடி நிறம், உயரம், புத்தி சாலித்தனம், அழகு, எடை, எப்படி இருக்க வேண்டும்' என்று கூறினால் போதும்.அவர்கள் பெற்றோர் விருப்பத்தின் படி, கருவுயிர் செல்களை மாற்றி விரும்பிய குழந்தையை உருவாக்கி விடுகிறார்கள்.

இது பற்றி சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது:-

சோதனை குழாய் குழந்தை போன்ற செயற்கை கருத்தரிப்பு முறை குழந்தை இல்லாத தம்பதியருக்கு உதவத் தான் உருவாக்கப்பட்டது.தற்போது புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிசைனர் பேபி முறை வந்துள்ளது. இது அனைத்து பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கருப்பையில் முதிராத கருவாக உள்ள நிலையில் முட்டைக் கருவுயிரில் சில மாற்றங்களை செய்ய இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.

இந்த தொழில் நுட்பம் மூலம் கருவுயிரில் குழந்தையின் நிறம், உயரம், கண் நிறம், மூக்கு, காது அமைப்பு, முடி நிறம், புத்திசாலித்தனம், நோயை எதிர்க்கும் தன்மை போன்றவற்றை மாற்றி அமைக்க முடிகிறது. இதன் மூலம் குறைபாடு இல்லாத குழந்தையை நாம் பெற முடியும். இந்த தொழில் நுட்பத்திற்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

2 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவில் மார்பக புற்று நோயை உண்டாக்கும் மரபணு அகற்றப்பட்ட குழந்தை ஒன்று செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்தது.அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை `நீங்கள் விரும்பும் "டிசைனர் பேபி'' வேண்டுமாப எங்களை உடனடியாக அணுகுங்கள்' என்று விளம்பரம் செய்திருந்தது.

அழகு+ புத்திசாலி குழந்தை:

இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர் பெர்னாட்ஷாவுக்கு ஒரு அழகான இளம்பெண் கடிதம் எழுதினார். அதில், "நான் உங்களை மணந்தால் என்னைப்போன்ற அழகும், உங்களைப் போன்ற புத்திசாலித்தனமும் கொண்ட குழந்தை பிறக்கும்" என்று குறிப்பிட்டிருந்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பெண்ணுக்கு உடனே பதில் கடிதம் அனுப்பினார்.

அதில் "நீ சொல்வது சரிதான். ஒருவேளை பிறக்கும் குழந்தை என்னைப்போன்ற அழகிலும், உன்னைப்போன்ற புத்திசாலித்தனம் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வாய்'' என்று எழுதி அந்த பெண்ணுக்கு உண்மையை புரிய வைத்தார். ஒருவேளை பெர்னாட்ஷா தற்போது இருந்திருந்தால் `டிசைனர் பேபி' முறையை கண்டு உண்மையில் துள்ளி குதித்திருப்பார். அப்படித் தானே!

பாலினத்தையும் மாற்ற முடியும்:

இந்த டிசைனர் பேபி முறையில் பரம்பரையாக தொடரும் நோய்களை எளிதில் தடுக்க முடியும். உதாரணமாக நீரிழிவு நோயை சொல்லலாம். கருப்பையின் முதிராத கருவுயிரில் உள்ள ஏழெட்டு செல்களில் ஒன்றை மட்டும் விஞ்ஞானிகள் இந்த மரபணு தொழில் நுட்ப ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

அதில் தான் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் செல்லில் பல்வேறு மாற்றங்கள் செய்வதால் "டவுன் சின்ட்ரோம்'' ஆட்டிசம், மன வளர்ச்சி குன்றுதல், உடல் ஊனம், பார்வை இழப்பு, காது கேளாமை போன்ற எந்த வித குறைபாடும் அந்த குழந்தைகளுக்கு ஏற்படாது. ஆணாக இருந்தால், பெண்ணாக மாற்ற முடியும்.

பெண்ணாக இருந்தால் ஆணாக மாற்ற முடியும். குழந்தைகளை எந்த வித மரபு நோயும் தாக்காமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்கும்படி மாற்றி அமைத்து விடலாம் என்கிறார் டாக்டர் காமராஜ்.

டிசைனர் பேபி மோகம்:

தற்போது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பரவி வரும் `டிசைனர் பேபி' மோகம் இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டிலும் பரவத்தான் போய்கிறது. நமது இளைய தலை முறையினரிடம் இந்த புதுவகை செயற்கை கருத்தரிப்பு முறை பரவும் நிலை உள்ளது.

சாதாரணமாக நம்மூர் மக்கள் பலர் மேற்கத்திய பாணிக்கு மாறி விட்டார்கள். இதனால் தற்போது அழகான, புத்திசாலியான குழந்தை பெற விரும்பும் பெற்றோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.

நவீன சிகிச்சைகள்:

தற்போது குழந்தையின் மைக்கான நவீன சிகிச்சைகள் ஏராளம் உள்ளன. சோதனை குழாய் குழந்தை, பி.ஓ.எஸ்.டி., டி.ஐ.பி.ஐ., டி.ï.எப்.டி., கிப்ட், இக்சி போன்ற சிகிச்சைகள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை பெற்று கொள்கிறார்கள். செயற்கை கருத்தரிப்பின் அடுத்தக்கட்ட முன்னேற்றம்தான் `டிசைனர் பேபி' முறை.

`குளோனிங்' முறை போல்' :

`குளோனிங்' என்பது ஒன்றை போலவே இன்னொன்றை ஆய்வு மையத்தில் உருவாக்குவது. ஒரு ஆட்டின் திசுவை எடுத்து அதை ஆய்வு கூடத்தில் கருவாக்கி, அதன் மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்து அந்த ஆட்டைப் போலவே இன்னொரு ஆட்டை உருவாக்குவதாகும். இப்படி ஆய்வுகூடத்தில் உருவாக்கப்படும் `குளோனிங்' ஆடுகள் உடலில் எந்தவித நோயும் தாக்காது.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும். இதேபோல்தான் `டிசைனர்பேபி' தொழில்நுட்பம் மூலம் மனிதர்களை `நகல்' எடுக்கத் தயாராகி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள் என்கிறார் டாக்டர் காமராஜ்.

டிசைனர் பேபிக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு:

டிசைனர் பேபி முறையில் உருவாக்கப்படும் குழந்தைகளுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறைவனின் படைப்புக்கு எதிராக மனிதன் புதிய உயிரினங்களை உருவாக்குவது நல்லதல்ல. எதிர்காலத்தில் என்னமாதிரியான விளைவு ஏற்படும் என்று நீண்டகால ஆராய்ச்சி செய்யப்படவில்லை. எனவே இம்முறையில் குழந்தைகளை உருவாக்கக்கூடாது'' என்று கூறி வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum