மூளை வளர்ச்சி குறைபாட்டை கருவிலேயே கண்டறியலாம்..!
Page 1 of 1

'டவுன் சின்ட்ரோம்' எனப்படும் மூளைவளர்ச்சி குறைபாட்டை கருவிலே இப்போது கண்டறிய முடியும். கருவில் இருக்கும் குழந்தையின் உடலில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் கண்டறியலாம். ஆனால் `டவுன் சின்ட்ரோம்' பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு உடல் ஊனம் இருக்காது என்பதால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மட்டும் அதை கண்டறிய போதுமானதல்ல. கூடுதலாக சில ரத்த பரிசோதனைகளை செய்தால் தான் `டவுன் சின்ட்ரோம்' பாதிப்பை கண்டறிய முடியும்.
அந்த நவீன பரிசோதனை முறைகள் அதிக செலவு வைக்கக்கூடியது. சில மையங்களில் மட்டுமே அந்த சவுகரியங்கள் உள்ளன. அதனால் எல்லா கர்ப்பிணிகளும் இதை செய்து பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே நேரத்தில் முப்பது வயதைக்கடந்த பின்பு கர்ப்பமடையும் பெண்களும், ஏற்கனவே மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளை பெற்றெடுத்திருக்கும் தாய்மார்களும், நெருக்கமான உறவினர்களை திருமணம் செய்திருப்பவர்கள், குரோமோசோம் பாதிப்பு கொண்டவர்களும் அதிக பாதிப்பிற்குரியோர் பட்டியலில் உள்ளவர்கள்.
அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ரத்த பரிசோதனைகளை செய்து கொள்ள முன்வர வேண்டும். கர்ப்பமான 11 வாரங்களுக்கும் 14 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த பரிசோதனைகள் செய்யப்படவேண்டும். அதில் முதலாவதாக செய்யப்படவேண்டியது, அல்ட்ரா சவுண்ட். நிபுணத்துவம் வாய்ந்த ரேடியோலஜிஸ்ட் இதை செய்ய வேண்டும். கருக்குழந்தையின் பின்கழுத்தை ஸ்கேன் செய்து, `நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி' என்ற இயற்கை நீரின் அளவை பரிசோதிப்பார்கள்.
அது அதிக அளவில் இருந்தால் அந்த குழந்தை மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டதாக இருக்கலாம். அதோடு மூக்கு எலும்பு வடிவம் பெற்றிருக்கவில்லை என்றாலும் மூளை வளர்ச்சி குறைபாடாக கருதலாம். ப்ரக்னன்சி அசோசியேட்டட் பிளாஸ்மா புரோட்டீன் ஏ, பீட்டா ஹிïமன் கோரியோனிக் கைனோடோ டிரோப்பின் போன்றவை ரத்தத்தில் எந்த அளவு இருக்கிறது என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.
கர்ப்பிணியின் வயது, கர்ப்பத்தின் சரியான நாட்கள், ஸ்கேனிங் பரிசோதனை முடிவு, ரத்த பரிசோதனைகளின் முடிவு போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அந்த கருக்குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாட்டிற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிவார்கள். பாதிப்பை பற்றிய தெளிவான முடிவுக்கு வரவேண்டும் என்றால் கர்ப்பத்தில் இருந்து திசுக்களை எடுத்து `கார்யோ டைப்பிங்' செய்ய வேண்டும்.
இது குரோமோசோம் ஆய்வாகும். இதை செய்யும்போது `அபார்ஷன்' ஆகும் சூழ்நிலை உண்டு. அதனால் முதல்கட்ட பரிசோதனைகள் மூலம் `அபார்ஷன்' சூழலைப் பற்றி முடிவு செய்துவிட்டு, கணவன்- மனைவி இருவருக்கும் கவுன்சலிங் கொடுக்கவேண்டும். `பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அபார்ஷன் ஆகலாம். பரிசோதனைக்கே உட்படுத்தாவிட்டால் குழந்தை மூளை வளர்ச்சியற்றதாகவும் பிறக்கலாம்.
அதனால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி' தம்பதிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். `அதிக பாதிப்பிற்குரியோர்' என்ற பட்டியலில் வரும் கர்ப்பிணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனைகளில் `டவுன் சின்ட்ரோம்' பாதிப்புகள் இல்லை என்று தெரிந்தாலும், 14 முதல் 18 வாரங்களுக்குள் மீண்டும் சில ரத்த பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும்.
அதில் `டவுன் சிண்ட்ரோம்' பாதிப்புகள் இருப்பதாக அறிந்தால், கர்ப்பத்தில் இருந்து திசுக்கள் எடுத்து `கார்யோ டைப்பிங்' பரிசோதனை செய்து பாதிப்பை பற்றிய இறுதி முடிவுக்கு வரலாம். அந்த காலகட்டத்தில் அபார்ஷன் செய்வது கஷ்டம் என்றாலும், அதை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இதர உடல் ஊனங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு இருந்தால், அதை எப்படி கண்டுபிடிப்பது? உடல் ஊனங்களை கண்டுபிடிக்க அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் துணைபுரியும்.
பெரும்பாலான ஊனங்களை 11 முதல் 14 வாரங்களில் கண்டறியலாம். சிலருக்கு இதை பலகட்டங்களாக செய்யவேண்டியதிருக்கும். 11-14 வாரங்களுக்கு இடையிலும், 18-22 வாரங்களுக்கு இடையிலும், 24 வாரங்கள் கடந்த பின்பும் அந்த சோதனையை செய்யவேண்டும். `கருக்குழந்தை வளர்ந்து, ஐந்து மாதங்கள் ஆன பின்பு அது ஊனமாக இருப்பதை தெரிந்து என்ன செய்வது?' என்ற கேள்வி பெரும்பாலானவர்களுக்கு எழும். ஊனத்தில் பலவகை இருக்கிறது.
பிறந்த பின்பு ஆபரேஷன் மூலம் சில ஊனங்களை சரி செய்திட முடியும். சில ஊனங்களோடு அதிக கஷ்டப்படாமல் வாழவும் முடியும். பிறந்து பலனே இல்லை என்பது போன்ற ஊனமும் உண்டு. அந்த வகை ஊனம் இருந்தால், மருந்துகொடுத்து பிரசவித்து வெளியேற்றி விடலாம்.
சிறிய ஊனங்கள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள தாயை மனோரீதியாக பக்குவப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். அதனால் கருவிலே ஊனங்களை கண்டறிவது நல்லது. கர்ப்பத்தில் வைத்தே குழந்தைக்கு சிகிச்சை கொடுப்பது, ஆபரேஷன் செய்வது போன்ற நவீன முறைகள் இந்தியாவில் விரைவாக வர வாய்ப்பிருக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மரபணு குறைபாட்டை கருவிலேயே அறியலாம்
» கருவிலேயே வைரஸ் பரவுகிறது?
» நரைமுடி,குறைபாட்டை நீக்கும் முறைகள் !
» பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண் செல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum