தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்!

Go down

தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Empty தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்!

Post  meenu Thu Jan 24, 2013 1:42 pm

குழந்தைக்கு பாலூட்டுவதால் அழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டுவது இன்னமும் தொடரத்தான் செய்கிறது. `தாய்ப்பாலில் இல்லாத சத்துகளே கிடையாது, அதைக் கொடுப்பதால் தாய்க்கு எந்த பாதிப்பும் கிடையாது' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினாலும், புட்டிப்பாலை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்கிற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சில வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாலூட்டுவதால் ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவில் கிடைப்பதுடன், அந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பாலூட்டுவதால் அந்த தாய்க்கு பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், காக்காவலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு வருடம் வரை தொடர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பலன் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் ஆரோக்கியம்
» இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» இதயத்தை பாதிக்கும் உடற்பயிற்சி
» குழந்தைகளின் காய்ச்சல் வலிப்பு : இரும்பு கொடுப்பது மூடநம்பிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum