இதயத்தை பாதிக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
இதயத்தை பாதிக்கும் உடற்பயிற்சி
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மிகவும் பிசியாக இருப்பதற்கு அதாவது ஜெட் வேக வாழ்க்கை முறைக்குப் பலியாவது தூக்கம் தான். நான் சில மணி நேரம் தூங்கினால் போதும் தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்து விடுவேன் என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்கு முறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை உயிர்க் கடிகாரத்தைப் பாதிக்கிறது.
எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது என்று இதய மருத்துவர் ஒருவர் கூறுகிறார். உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லது தான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்
» அதிக துக்கம் பெண்களின் இதயத்தை பாதிக்கும்!
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
» பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்
» அதிக துக்கம் பெண்களின் இதயத்தை பாதிக்கும்!
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum