தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூண்டு-வெங்காயக் குழம்பு

Go down

பூண்டு-வெங்காயக் குழம்பு Empty பூண்டு-வெங்காயக் குழம்பு

Post  ishwarya Fri May 10, 2013 5:51 pm

தேவையானவை:

நாட்டுப் பூண்டு – 4 பல்,
சாம்பார் வெங்காயம் – 10,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 1
கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – அரை கப்,
கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு,
புளித் தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை

பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.

விருப்பப்பட்டால் கொதிக்கும்போது . தக்காளியும் சேர்க்கலாம். ருசி கூடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum