குளிர்காலத்தில் சரும பாதுகாப்பிற்கு
Page 1 of 1
குளிர்காலத்தில் சரும பாதுகாப்பிற்கு
குளிர்காலத்தில் சருமம் அதிகளவு வறட்சி அடைந்து விடுவதால், பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவர்.
ஆனால் ஒரு சிலருக்கு க்ரீம்களால் சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாகிவிடும். எனவே எந்தவொரு க்ரீமையும் பயன்படுத்தாமல், இயற்கையாகவே பல்வேறு வழிகள் காணப்படுகின்றன.
1. பாலை வைத்து முகத்தை கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் வறட்சி ஏற்படாமலும் இருக்கும்.
எனவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தை பாலால் கழுவி, பின்னர் நீரால் அலச வேண்டும்.
அதேப்போன்று வெளியே செல்லும் முன் பாலை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, பின் மைல்டு ஃபேஸ் வாஷ்ஷால் கழுவ வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு, போதுமான ஈரப்பசையுடன் இருக்கும்.
மேலும் இதனை தொடர்ந்து செய்து வந்தால், சருமம் எப்போதுமே பளிச்சென்று இருக்கும்.
2. முகத்தை சுடு நீரால் கழுவினால் முகத்தில் உள்ள சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக எண்ணெயை சுரந்து, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயை தங்க வைக்கும்.
எனவே குளிர்காலத்தில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் பருக்கள் ஏற்படுவது குறைவதோடு, பருக்கள் பரவுவதையும் தடுக்கலாம். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் பயன்படுத்தலாம்.
3. பொதுவாக தக்காளி சாறானது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தக்காளி சாறுடன், சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும்.
இதில் எலுமிச்சை சாறு அதிகமான எண்ணெய், இறந்த செல்கள் போன்றவற்றை வெளியேற்றிவிடும். முக்கியமாக எலுமிச்சையை பயன்படுத்தினால், கழுவியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும்.
4. சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வாரத்திற்கு 2 முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் ஓட்ஸ் அல்லது பாதாமை அடிப்படையாகக் கொண்ட ஸ்கரப்களை பயன்படுத்துவது நல்லது.
இந்த ஸ்கரப் போடுவதற்கு முன், முகத்தை நீரால் நன்கு சுத்தமாக கழுவிக் கொண்டு பின்னர் ஸ்கரப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் ஸ்கரப் போட்ட பின் 1-2 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதனால் இறந்த செல்கள், கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவை வெளியேறிவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரும பாதுகாப்பிற்கு மூலிகைப் பொடி
» பெண்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு
» குளிர்காலத்தில் மூட்டுவலியா ஏன்
» குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகமாகும்
» குளிர்காலத்தில் பாதங்களை சரியா பராமரிக்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum