குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகமாகும்
Page 1 of 1
குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகமாகும்
மூட்டுவலி சார்ந்த நோய்களுக்கு கோவை ஆர்த்தோ ஒன் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத் பதிலளிக்கிறார்.
எனக்கு வயது 50 ஆகின்றது, கடந்த சில மாதங்களாக எனது இடது கையால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. கைகளை அசைத்தாலே அதிக வலியை ஏற்படுகிறது. மருத்துவரை சந்தித்து பார்த்தோம் கழுத்துப்பகுதியில் பாதிப்பு இருக்கலாம் என்று டிராக்சன்னை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும்படி கூறினார். நானும் அதை பயன்படுத்தி அவர் கூறிய பயிற்சிகளை செய்தேன் இருந்தாலும் வலி சரியாகவில்லை. இடது கையை பாதிக்கு மேல் உயர்த்த முடிவதில்லை. இரவு நேரங்களில் அதிக வலியின் காரணமாக நன்றாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டது நான் என்ன செய்யவேண்டும்?
40 வயதை கடந்த பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவது இயல்பு தான். நீங்கள் கூறும் அறிகுறியை வைத்து பார்க்கும் போது தோள்பட்டை இறுக்க பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இதற்கு டிராக்சன் பயன்படுத்த தேவையில்லை. இந்த பாதிப்பினால் வலி ஒரு வருடங்கள் வரை கூட இருக்கலாம். முறையாக பிசியோதெரப்பி பயிற்சியின் மூலம் இதை மெல்ல மெல்ல குறைக்கலாம்.
எலும்பு தேய்மானம் முதிய வயதில் அனைவருக்கும் வரும் என்று கூறுகின்றனர். எனது தாய் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இல்லை எனக்கு அதுபோன்ற வலி வருவதை தவிர்க்க வேண்டும். எனக்கு 30 வயது ஆகிறது. முதுமை காலத்தில் மூட்டு வலியை தவிர்க்க ஏதேனும் மாத்திரைகளை தற்போது முதல் எடுத்துக்கொள்ளாமா? அல்லது வேறு வழிமுறை ஏதேனும் உள்ளதா?
உங்களுக்கு தற்போது மூட்டு மற்றும் எலும்பு சார்ந்த பாதிப்புகள் இருக்கின்றதா, இல்லையா என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது பாதிப்பை தவிர்ப்பதற்கான தீர்வாகாது. உடல் எடையை குறைத்து உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள், உடல் எடை, உணவு முறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
ஆர்த்ரோஸ்கோபிக் சிகிச்சை எதற்காக செய்யப்படுகிறது? சிறிய துளையிட்டு குழாய் சேர்க்கப்படும் என்று கூறுகின்றனர் இது எப்படி சாத்தியம் ?
பொதுவாக இந்த சிகிச்சை விளையாட்டு துறையில் ஈடுபடுபவர்களுக்கு செய்யப்படுகிறது. அதாவது குருத்தெலும்பு பிரச்னை, முழங்காலில் அடிபட்டு ஜவ்வு கிழிதல் போன்றவற்றை சரிசெய்ய இந்த சிகிச்சை முறை செய்யப்படுகிறது. இது சிறிய துளையிட்டு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை எளிதாக சரிசெய்து கொள்ளலாம்.
நான் ஒரு சர்க்கரை நோயாளி, சர்க்கரை பாதிப்பு இருப்பவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு வரும் என்பது எனக்கு தெரியும். ஆனால் மூட்டு தேய்மானம் எளிதில் வந்து விடும் என்று இணையதளத்தில் பார்த்தேன்? சர்க்கரையின் காரணமாக மூட்டு தேய்மானம் வருவதற்கு என்ன காரணம் ?
சர்க்கரை நோய் என்பது மூட்டு வலிக்கோ, முழங்கால் பாதிப்பிற்கு நேரடி காரணமாக இருக்காது. உடல் எடை அதிகமாக இருப்பது சர்க்கரை பாதிப்பிற்கு முக்கிய காரணம். அது போன்று எடை அதிகமானால் மூட்டு தேய்மானம், முழங்கால் வலி போன்றவை ஏற்படும். சர்க்கரை நோய் என்பது மறைமுக காரணமே தவிர நேரடியாக இதற்கு தொடர்பு இல்லை.
பிசியோதெரப்பி பயிற்சி எந்த வகையில் மூட்டு தேய்மானத்திற்கு பயன்படும்?
பிசியோதெரப்பி மூட்டு சார்ந்த பிரச்னைகளுக்கு அதிகம் பயன்படுகிறது. இந்த பயிற்சிகள் செய்வதன் மூலம் மூட்டு சுற்றியுள்ள தசை பகுதிகளுக்கு வலிமை கிடைக்கிறது. மேலும் தசை பகுதிகளுக்கு சமநிலை தன்மையை தருகிறது.
குளிர்காலங்களிலும், மழை காலங்களிலும் மூட்டு வலி அதிகமாக இருக்கிறது இதை எவ்வாறு தவிர்க்கலாம்? வலி ஏற்பட்டதும் உடனடியாக நிற்க வலி மாத்திரை தவிர வேறு என்ன வழிகள் உள்ளது?
குளிர்காலங்களில் எந்த வலியாக இருந்தாலும் அது அதிகமாகும். கம்பளி, கால் மற்றும் கை உறைகளை பயன்படுத்தி குளிரை கட்டுப்படுத்தலாம். வலி ஏற்படும் போது சுடு நீரில் ஒத்தடம் கொடுக்கலாம்.
யோகா பயிற்சியின் மூலம் மூட்டு வலியை கட்டுப்படுத்த முடியுமா?
யோகா மூலம் சில மூட்டு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளது. ஆனால் யோகா பயிற்சியாளர்கள் மூலம் தான் இதை சரியாக தெரிந்துகொள்ள முடியும்.
முழங்கால் மூட்டு தவிர பிற மூட்டுகளையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா?
நிச்சயம் முடியும் தற்போது மருத்துவ துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் ஏற்பட்டுள்ளது. முழங்கால் மூட்டு போன்று, முழங்கை மூட்டு, தோள்பட்டை போன்றவைகளை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
ஆஸ்த்ரியோபுரோசிஸ் என்பது என்ன? இது கால்சியம் குறைபாட்டால் ஏற்படுமா?
ஆஸ்த்ரியோபுரோசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி குறைவால் ஏற்படும் பாதிப்பு. இதனால் தடுக்கி விழுந்தால் கூட எலும்புகள் எளிதில் உடைந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எலும்பு கால்சியம் மட்டும் இன்றி, வைட்டமின் டி, ஹார்மோன், புரோட்டின் போன்ற அனைத்தும் சேர்ந்து இருந்தால் தான் அடர்த்தியாக இருக்கும்.
நான் ஒரு தகவல்தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி புரிகிறேன் விடுமுறை நாட்கள் தவிர வேலை நாட்கள் அனைத்திலும் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியில் வேலை செய்யவேண்டும், நாற்காலியில் அதிக நேரம் கால்களை தொங்கவிட்டு உட்கார்ந்து இருப்பேன் முதலில் இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த சில வாரங்களாக கால்கள் பாதப்பகுதியிலும், முழங்கால் மூட்டிலும் வீக்கத்துடன் வலி ஏற்படுகின்றது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக வயது முதிர்ந்தவர்களுக்கு அதிக நேரம் கால்களை தொங்கவிட்டு அமர்ந்திருந்தால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் நீர் தங்கி காலில் வீக்கம் ஏற்படும். ஆனால் சிறிய வயதில் கால் வீக்கம் ஏற்படுவது என்பது கவனிக்க வேண்டியது. ரத்த குழாய் சுருண்டு இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். மேலும் ரத்த அழுத்தம், சிறுநீர் பாதிப்பு, சர்க்கரை போன்ற பாதிப்புகள் இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளிர்காலத்தில் பாதங்களை சரியா பராமரிக்க...
» கோலிவுட்டில் அதிகமாகும் பார்ட்,2 மோகம்
» டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் அதிகமாகும்: ஆய்வில் தகவல்
» குளிர்காலத்தில் மூட்டுவலியா ஏன்
» குளிர்காலத்தில் சரும பாதுகாப்பிற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum