குளிர்பானங்களால் பற்களுக்கு பாதிப்பு வருமா?
Page 1 of 1

எனக்கு பல்லில் சொத்தை இல்லாத நிலையிலும், வாயின் இடது பக்கம் வலி ஏற்படுகிறது. சாப்பிடும்போதும், முகம் கழுவும்போதும் அவ்விடத்தை தொட்டால் வலி ஏற்படும். காதுவரை ஊசி குத்துவது போல இருந்து, தானாக சரியாகிவிடும். இதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா?
இது பற்களால் ஏற்படும் வலி அல்ல. நரம்பினால் ஏற்படும் வலி. முகத்தின் பக்கவாட்டில் நமது காது, முகம் மற்றும் வாய்க்கு செல்லும் நரம்பு உள்ளது. இந்த நரம்பில் அழுத்தம் ஏற்படும்போது வலி ஏற்படும். அது பற்கள், தாடை, காதுவரை பரவும். இது நரம்பில் ஏற்படும் மாற்றங்கள்.
நரம்பின் அருகே கட்டி ஏதாவது உருவாகி, அதனால் ஏற்படும் அழுத்தத்தால் வரும் வலி, பல சமயங்களில் எந்தக் காரணமும் இல்லாமலேயே வரலாம். 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நரம்பு வலி வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை உறுதி செய்ய முதலில், சில நரம்பு பரிசோதனைகளை செய்ய வேண்டும். பின், மாத்திரையால் அல்லது சிறிய அறுவை சிகிச்சை மூலம் நரம்பில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை நீக்க வேண்டும். சரியான சிகிச்சை முறையால் இந்த வலி முற்றிலுமாக குணமடையும்.
18 வயதான என் மகனுக்கு அடிக்கடி, குளிர்பானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்களுக்கு ஏதும் பாதிப்பு வருமா? இதனை தவிர்க்க என்ன வழி?
பெரும்பான்மையான குளிர்பானங்களில் அமிலத்தன்மை உள்ளது. அத்துடன் சர்க்கரையும், பல ரசாயனங்களும் கலந்துள்ளன. இவை பற்களுக்கு நல்லதல்ல. இவற்றை அடிக்கடி அருந்துதல் அல்லது சிறிது சிறிதாய் பல மணி நேரம் அருந்துதல், பற்களுக்குத் தீங்கு விளைவிக்கும். அவை பற்களின் வெளிப்புறத்தில் இருக்கும் எனாமல் அரிக்கும் தன்மை கொண்டவை. ஒருமுறை அரிக்கப்பட்ட எனாமல், மறுமுறை உருவாகாது.
இதற்கு பற்களில் ஏற்படும் “எரோஷன்’ என்று பெயர். நாளடைவில் எனாமல் தேய்ந்து, பற்களில் கூச்சம், வலி உண்டாகும்.
அதுமட்டுமின்றி, இப்பற்களில் சொத்தை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். இதைத் தவிர்க்க அமிலத் தன்மை வாய்ந்த குளிர்பானங்கள் அருந்துவதை முடிந்தவரை குறைக்க வேண்டும். தூங்கும் முன், கண்டிப்பாக இவற்றை உட்கொள்ளக் கூடாது. அப்படியே அருந்த நேர்ந்தாலும் உடனே தண்ணீரால் வாயை கழுவிவிட வேண்டும். அப்படியும் பற்களில் கூச்சம் ஏற்பட்டால் அதற்கேற்ற சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளிர்பானங்களால் பற்களுக்கு பாதிப்பு வருமா?
» இரத்த அழுத்தத்தினால் தண்டுவட பாதிப்பு வருமா
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» சிப்ஸ் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருமா?
» யோகிக்குத் தடை வருமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum