தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிப்ஸ் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருமா?

Go down

சிப்ஸ் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருமா? Empty சிப்ஸ் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருமா?

Post  ishwarya Fri Mar 01, 2013 4:53 pm

"நீங்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியரா? அது இல்லாமல் உங்களுக்கு ஒருநாளும் நகராதா? சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்வதில் இருந்து போரடித்தால் கொறிப்பது வரை எல்லாவற்றுக்கும் சிப்ஸ் தேடுபவரா?

அப்படியானால் புற்றுநோய் மருத்துவரிடம் இப்போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆமாங்க... அளவுக்கதிகமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது. உருளைக்கிழங்கை அதிகபட்ச கொதிநிலையில் டீப் ஃப்ரை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் "அக்ரிலாமைட்" என்கிற ரசாயனமே புற்றுநோய்க்குக் காரணம்!

பெட்டிக்கடையில் வாங்கிச் சாப்பிடுகிற சாதாரண சிப்ஸ் முதல், கண் கவரும் விளம்பரங்களுடன் கிடைக்கிற பிரபல நிறுவனத் தயாரிப்புகள் வரை எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க...."

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சேகர் கூறியது:

"உருளைக்கிழங்கு சிப்ஸ்ல அக்ரிலாமைட்னு சொல்ற ரசாயனம் இருக்கிறது உண்மைதான். உருளைக் கிழங்கு சிப்ஸ்ல மட்டுமில்லாம, பேக்கரி பொருட்கள் பலவற்றிலும் இது இருக்கு. கார்போஹைட்ரேட் அதிகமா உள்ள ஒரு உணவை எந்தளவு சூடாக்கறோம், எவ்வளவு நேரம் சூடாக்கறோம்ங்கிறதைப் பொறுத்தே இந்த அக்ரிலாமைட் வெளியேறும். பொரிக்கிற, ரோஸ்ட் பண்ற, பேக் பண்ற உணவுகள் எல்லாம் இதுல அடங்கும். பிரவுன் நிற உணவுகளையும் சேர்த்துக்கலாம். காபி கொட்டையைக் கருக வறுத்து அரைக்கிறதுகூட இந்த ரகம்தான்.

எஃப்.டி.ஏனு சொல்ற ஃபெடரல் டிரக் ஏஜென்சி, 2500 உணவுகளை மோசமானதுனு பட்டியலிட்டிருக்கு. அதுல உருளைக்கிழங்கு சிப்ஸூக்குதான் முதலிடம். அதுக்காக வாழ்க்கைல உருளைக்கிழங்கு சிப்ஸே சாப்பிடக் கூடாதானு கேட்காதீங்க. தாராளமா சாப்பிடலாம். உருளைக்கிழங்கை நறுக்கி, 20 முதல் 30 நிமிஷம் தண்ணில ஊற வைக்கணும். பிறகு அதைப் பொரிக்கிறப்ப, அக்ரிலாமைட் வெளியேற்றம் பெரியளவுக்குக் குறையும்.

பரம்பரைத் தன்மை, வாழ்க்கை முறைனு ரெண்டு காரணங்களைக் கடந்து, நாம சாப்பிடற சாப்பாடு மூலமா உண்டாகிற புற்றுநோய் 35 சதவிகிதம். கொஞ்சம் கவனமா இருந்தா, அதுலேர்ந்து தப்பிக்கலாம் இல்லையா?" என்கிறார் சேகர்.

வயது வித்தியாசம் இல்லாமல் சிப்ஸூக்கு எல்லாரும் அடிமை என்றாலும், குழந்தைகளின் விருப்பம் ஒரு படி மேல். "லஞ்ச்சுக்கு தொட்டுக்க சிப்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல சிப்ஸ், ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் சிப்ஸ்னு சில பெற்றோர் பாக்கெட் பாக்கெட்டா குழந்தைகளுக்கு சிப்ஸ் வாங்கித் தருவாங்க. இப்படி தினமும் 1 பாக்கெட், அதுக்கு மேலனு சாப்பிடறவங்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 2 மடங்கு அதிகம்".

"அந்தக் காலத்துல வத்தல், வடாம் சாப்பிடலையா? சிப்ஸூம் கிட்டத்தட்ட அப்படித்தானேனு கேட்கலாம். வத்தல், வடாம் என்பது வெயில்ல காய வச்சது. அப்படிக் காய வைக்கிறப்ப, அதுல உள்ள ஈரத்தன்மை முழுக்க போயிடும். ஆனா ஈரப்பதம் உள்ள மாவுப் பொருள் எதுவானாலும், பொரிக்க அதிக நேரம் எடுத்துக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் அப்படித்தான். அப்படி அதிக நேரம் சூட்டுக்கு உட்படுத்தப்படறப்பதான் அதுலேர்ந்து அக்ரிலாமைட் வெளியேறுது. உருளைக்கிழங்கையும் அந்த மாதிரி கொஞ்சம் நேரம் ஈரப்பதம் போக வச்சிருந்தோ, மைக்ரோவேவ்ல வச்சு எடுத்தோ, பொரிக்கிறது பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்கும். இது எல்லாக் கிழங்குகளுக்கும் பொருந்தும். எதையாவது சாப்பிட்டா போதும்ங்கிற நினைப்புல, பல அம்மாக்களும் குழந்தைகளுக்கு சிப்ஸ் கொடுத்துப் பழக்கறாங்க. சாப்பாட்டுக்குத் தொட்டுக்க காய்கறி பண்ணிக் கொடுக்க அலுத்துக்கிட்டு, சிப்ஸ் வாங்கி வைக்கிற வீடுகள் எத்தனையோ இருக்கு" என்கிறார் அவர்.

"குழந்தைங்களோட சிப்ஸ் ஆர்வத்துக்கு விளம்பரம், அதோட கவர்ச்சி, ருசினு பல காரணங்கள் உண்டு. 10 நாளைக்கொரு தடவை 1 பாக்கெட் சாப்பிடறதுல பெரிசா பிரச்சினை வராது. ஆனா, தினம் மூணு வேளை சாப்பிடறப்ப அதுக்கு அடிமையாக்கப்படறாங்க.

இந்தத் தலைமுறை டீன் ஏஜ் பிள்ளைங்க உடம்பு விஷயத்துல ரொம்பவே அக்கறையா இருக்காங்க. அவங்களைப் பத்தி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனா, சின்னக் குழந்தைங்ககிட்ட வெறுமனே சிப்ஸ் சாப்பிடக் கூடாதுனு சொன்னா, "சாப்பிட்டா என்ன?"னு ஏட்டிக்குப் போட்டியா அடம் பண்ணி சாப்பிடுவாங்க. அவங்களுக்குப் புரியறமாதிரி எடுத்துச் சொல்லணும். எல்லாத்தையும்விட, குழந்தைங்களுக்கு சிப்ஸ் வாங்கிக் கொடுக்கிற பெற்றோர், பாக்கெட்ல என்ன போட்டிருக்குனு கவனிக்கணும். இப்பல்லாம் அதோட கலோரி, என்னென்ன சேர்த்திருக்காங்கங்கற விவரங்கள் பாக்கெட்ல அச்சடிக்கப்பட்டே வருது. எது நல்லது, எது கூடாதுனு தெரிஞ்சு வாங்கிக் கொடுக்க வேண்டியது முக்கியம்".

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum