பருப்பு தண்ணி மசாலா
Page 1 of 1
பருப்பு தண்ணி மசாலா
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, சோம்பு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறி பவுடர் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து…. பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மசாலா பருப்பு வடை
» மஹாளய அமாவாசைக்கு முந்திரி பருப்பு மசாலா மெது பக்கோடா
» தண்ணி நடிகை
» பருப்பு உருண்டைக்குழம்பு
» பருப்பு பாயசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum