ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
Page 1 of 1
ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
தேவையானவை: ஸ்வீட் கார்ன் – 100 கிராம், பனீர் – 50 கிராம், உருளைக்கிழங்கு – 2, முந்திரிப் பருப்பு – 10, முந்திரி விழுது – சிறிதளவு, தக்காளி விழுது – 100 கிராம், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வெங்காயம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து… அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum