ஆண்களுக்கான டிரஸ் கோட்
Page 1 of 1
ஆண்களுக்கான டிரஸ் கோட்
*என்னங்க எங்களுக்கே ஏதோ 3 வகையான உடைகள் இருக்கு அதுல வேற டிரெஷ் கோடானு கேட்குறீங்களா
ஆண்களை பொறுத்தவரை சட்டை - பேண்ட் மட்டுமே அவர்களுக்கான உடையாக விதிக்கப்பட்டிருக்கிறது. பார்ட்டி, அலுவலகம்... என்று எல்லா இடங்களிலும் இதையேதான் அவர்கள் உடுத்த வேண்டிய நிலை. ஆனால், இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. இதிலும் வித்தை காட்டலாம் என்கிறார் சென்னையிலுள்ள பிரபல துணிக்கடையின் நிர்வாகியான ஹரிஹரன்.
*‘‘ஆண்கள் அணியும் சட்டைகளில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று நீளமான கோடுகள் போட்ட ஸ்ட்ரைப் சட்டைகள், இரண்டு, பிளெயின் சட்டைகள், மூன்றாவது கட்டம் போட்ட செக்டு சட்டைகள். இவை காட்டன், டெரிகாட்டன் போன்ற துணிகளில் வருகின்றன. அதே போல் பேண்டுகளும் டெரிகாட்டன், காட்டன் மற்றும் ஜீன்ஸ் போன்ற துணிகளில் கிடைக்கின்றன.
*ஆனால், அலுவலகம் செல்லும் போது அவர்கள் உடைகளை தேர்வு செய்து அணியவேண்டும். ஒவ்வொருவரின் உடல் அளவு மாறுபடும். அதற்கு ஏற்ப சட்டை மற்றும் பேண்டுகளை தேர்வு செய்து அணிய வேண்டும். ஸ்லிம் பிட், ரெகுலர் பிட் மற்றும் ரிலாக்ஸ் பிட் என்று மூன்று அளவுகளில் சட்டைகள் கிடைக்கின்றன.
*ஸ்லிம் பிட், ஒல்லியாக இருப்பவர்களுக்கு, ரெகுலர், மீடியமாக உளவர்களுக்கு, ரிலாக்ஸ் குண்டாக இருப்பவர்கள் அணியும்படி வடிவமைத்துள்ளனர். ‘‘சிவப்பாக, உள்ளவர்கள் அடர்த்தி நிற சட்டைகளை அணியலாம். மாநிறத்தில் உள்ளவர்கள் டல் நிற பேன்ட் மற்றும் அடர்த்தியான சட்டை அல்லது அடர்த்தியான பேண்ட் மற்றும் லைட் நிற சட்டையும் அணிந்தால் பார்க்க எடுப்பாக இருக்கும்.
*கார்ப்ரேட் அலுவலகங்களில் திங்கள் முதல் வியாழன் வரை சட்டை பேண்ட் அணிய வேண்டும். வெள்ளி அல்லது சனிக்கிழமை (அலுவலகம் இருந்தால்) பார்மல் டீ ஷர்டுகள் அணியலாம். அதாவது காலர் வைத்த டீஷர்ட். இதற்கு காட்டன் பேண்டுகள் நேர்த்தியாக பொருந்தும்.கருப்பு நிற ஷு, பெல்ட் எல்லா பேண்ட்டுக்கும் எடுப்பாக இருக்கும். அதே சமயம் பிரவுன் நிற ஷு அணியும் போது, அதே நிற பெல்ட் அணியவேண்டும்.
*டை... இதுவுமே உடைக்கு ஏற்ப மாறுபடும். சட்டையின் நிறத்துக்கு ஏற்ப மேட்சிங் ஆக அணியலாம் அல்லது கான்ட்ராஸ்ட் நிற டை தேர்வு செய்யலாம். கட்டம் போட்ட சட்டைக்கு புள்ளி, கட்டம் மற்றும் ஸ்ட்ரைப் டிசைன் டை அணியலாம். ஸ்ட்ரைப் சட்டைகளுக்கு பிளெயின், புள்ளி மற்றும் கோடு போட்ட டை, பிளெயின் சட்டைகளுக்கு எல்லா வகையான டைகளும் கட்டலாம். மேலும் டை கட்டும் போது அது பெல்ட் பக்கிள் மேல் வரை இருக்க வேண்டும். அதை விட நீளமாகவோ அல்லது குறை வாகவோ இருக்க கூடாது’’ என்கிறார் ஹரிஹரன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆண்களுக்கான டிரஸ் கோட்
» உங்க கல்யாணத்துக்காக கோட் வாங்க போறீங்களா...?இதோ சில டிப்ஸ்
» ஆண்களுக்கான மச்ச பலன்
» கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum