கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!
Page 1 of 1
கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலின் உறுப்புகள் பெரிதாகின்றன. குறிப்பாக மார்பு, வயிறு, விலா எலும்புகள் பெரிதாகிறது. இதற்கு முக்கிய காரணம் பிட்யூட்டரி சுரப்பிதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் மூளையில் அடிபாகத்தில் உள்ள இந்த சுரப்பி ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. ப்ரோலாக்டின் ஆண், பெண் இருவரிடமும் காணப்படுகிறது. ஆனால் பெண்கள் கர்ப்பமடைந்தால் இதன் சுரப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது. இதன் முக்கிய பணி கர்ப்பிணி பெண்களின் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதுதான்.
கர்ப்பிணிகளின் மார்பகத்தின் பால் சுரக்கும் சுரப்பிகளை “ப்ரோலாக்டின்” உப்ப வைத்து பெரிதாக்குகிறது. கர்ப்ப காலத்தின் போது ப்ரோலாக்டின் பிட்யூட்ரியில் மட்டுமன்றி மார்பக திசுக்களிலும், கர்பப்பை ஈரமான சுவர்களிலும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் மூளை, பிட்யூட்டரியை, ப்ரோலாக்டினை ‘ரிலீஸ்’ செய்ய ஆணையிடும்.
தாய்ப்பால் சுரப்பு
கர்ப்ப காலத்தில் அதிகமாகும் பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன், ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் குழந்தை பிறந்தவுடன் தரவேண்டிய தாய்ப்பால் உற்பத்தியை ப்ரோலாக்டின் தயாராக வைக்க உதவுகிறது. பிரசவத்திற்கு பின் பிறந்த குழந்தை தாய்பாலை பருகும் போது, ப்ரோலாக்டின் உற்பத்தி மேலும் தூண்டப்படுகிறது. அடுத்த பால் கொடுக்கும் வேளைக்கு தயாராக பால் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
தளர்வான உடைகள்
கர்ப்ப காலத்தில் மார்பகம், வயிறு, கருப்பை மற்றும் விலா எலும்பின் அளவு அதிகரிக்க காரணம் ஹார்மோன். ஏனெனில், அது அனைத்து பகுதிகளிலும் சுருக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தளர்வடையச் செய்து இப்பகுதிகளை பெரிதாக்குகிறது. எனவே கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்தால் மார்பக அழுத்தத்தின் காரணமாக மேலும் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நெஞ்செரிச்சல்
கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களாகிய நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், உதரவிதானம் இறுக்கமடைதல்,விலா அகலப்படுத்துதல் போன்ற காரணங்களால் மார்பு மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தில் சிறந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நெஞ்சு எரிச்சல் தர கூடிய உணவு வகைகளை தவிர்க்கலாம். அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும். அது சீரான பிரசவத்திற்கு வழி வகுக்கும்.
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மார்பு இறுக்கம் இயல்பானதாக கருதப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவை கடுமையான பிரச்சனைகனை ஏற்படுத்தக்கூடும். அதாவது மார்பு அழுத்தம் அதிகமாக இருந்தால் ஆஸ்துமா, மாரடைப்பு இரத்தம் உறைதல் அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை
» கர்ப்ப காலத்தில் சர்க்கரை இருக்கா?
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை
» கர்ப்ப காலத்தில் சர்க்கரை இருக்கா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum