தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு மெலிவு நோய்

Go down

பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு மெலிவு நோய் Empty பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு மெலிவு நோய்

Post  meenu Tue Jan 22, 2013 5:15 pm

நடுத்தரவர்க்கப் பெண்கள் வெளியில் அதிகம் வராததால் அவர்கள் மீது வெயில்படுவதில்லை. இதனால் எலும்பு மெலிவு நோய் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நோய் கண்டவர்களின் எலும்புகள் எளிதில் உடையும் தன்மையாகவே மாறிவிடும். எலும்பு மென்மையாக மாறும்போது அதில் துவாரங்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 100 கிராம் சுண்ணாம்புச் சத்து தேவை. இந்தியாவில் ஆறுகோடியே பத்து இலட்சம் பேர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெண்களே அதிகம். காரணம், இவர்கள் மீது இயற்கை வெளிச்சமோ வெயிலோ படாததுதான். எலும்பு மெலிவு வெளியே எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் நோயாகும். இதை ஆஸ்டியோ போரேசிஸ் என்றழைக்கின்றனர்.

அதிகம் மது அருந்தும், புகைக்கும் ஆண்களுக்கும் உழைப்பு இல்லாதவர்களுக்கும் கூட இந்த நோய் பரவி வருகிறது. இந்த நோய் முற்றினால் கைகால்களை அசைக்க முடியாது. பெண்களும் ஆண்களும், சுண்ணாம்புச் சத்து வைட்டமின் ‘டி’யும் உள்ள உணவுவகைகளை நன்று சாப்பிட வேண்டும். தினமும் வெயிலில் சிறிது நேரம் உலாவவும், காலை அல்லது மாலை வெயிலில் உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.

மாதவிலக்கு நிற்கும் சமயத்தில் அவதிப்படும் பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற இந்த எலும்பு மெலிவு நோய்க்கு நல்ல பலனைத் தருகிறது. வைட்டமின் ‘டி’யும் சுண்ணாம்புச் சத்தும் கிடைக்க பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய் இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும்.

சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் ‘டி’யை மாத்திரையாகவும் சாப்பிடலாம். சுண்ணாம்புச் சத்து நன்கு கிடைக்கவேண்டுமானால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவுச் சப்பாத்தி, தண்டுக்கீரை, காரட், ஆரஞ்சுப்பழம், பாதாம்பருப்பு, வால்நட் பருப்பு முதலியவற்றையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.

இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் முதலியன இருந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியே. இந்த உணவுவகைகளைத் தொடர்ந்து சேர்த்து வந்தால், எலும்பு மெலிவு நோய் முற்றிலும் குணமாக்கப்பட்டுவிடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum