பருமனுக்கு அரிசி வடை
Page 1 of 1
பருமனுக்கு அரிசி வடை
உணவுப்பழக்கத்தின் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள முதன்மை விளைவு - பருமன். உலகெங்கும் 100 கோடிப் பேருக்கு இந்தப் பிரச்னை. இவற்றில் 30 கோடி பேர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு சிக்கலில் இருக்கிறார்கள். மூன்றில் ஒரு இந்தியர் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு பக்கம், உரிய சத்துணவு கிடைக்காமல், நாள்தோறும் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் பருமன் பிரச்னை... இந்தியாவின் வினோதங்களில் இதுவும் ஒன்று.
சென்னைவாசிகளில் 38 சதவிகிதம் பேர் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இந்தியாவின் பருமன் பட்டியலில் பஞ்சாப், கோவா, ராஜஸ்தானை அடுத்து நான்காவது இடம் தமிழகத்துக்கு. நாகரிகம், நவீனம், பெருமிதம் என்ற பெயரில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட விபரீதம் இது. பருமனால் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவிகிதம் பெண்களே என்கிற அந்த ஆய்வு, கடந்த 15 வருடங்களில் பிறந்த குழந்தைகள் எடைச் சமநிலை இல்லாமல் பிறப்பதாகவும் எச்சரிக்கை மணி அடிக்கிறது. அதிக எடை கொண்ட குழந்தைகள் மரபு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் சொல்கிறது அந்த ஆய்வு. 62 சதவிகிதம் பேரின் பருமனுக்கு தவறான உணவுப்பழக்கமே காரணம்.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்... நம் பாரம்பரிய சத்தான உணவுகளில் மேற்கத்திய கொழுப்பும் சர்க்கரையும் உப்பும் மிதமிஞ்சிக் கலந்துவிட்டது. நேரடியாக கொழுப்பாகவும் சர்க்கரையாகவும் திணிக்கப்படும் உணவை நம் வயிறால் எதிர்கொள்ள முடியவில்லை. வெளியேற்ற வழியறியாமல், செயல் இழந்து, கொட்டப்படுகிற கலோரியை முழுமையாகச் சேமிக்கிறது நம் உடல். ஒவ்வொரு மனிதனும் தினம் அரை மணி நேரமாவது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 1 கப்
தேங்காய் - அரைமூடி
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் எண்ணெய் -
பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியை வறுத்து, இடியாப்ப மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறுதுண்டுகளாக வெட்டி தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் அரைப் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை மாவில் சேர்த்து, உப்பு சேர்த்து பிசைந்து, வட்டவடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். மாவில் தண்ணீர் அதிகமானால் எண்ணெய் காலியாகி விடும்... கவனம்!
ஆனால், 60 சதவிகிதம் பேர் அரைமணி நேர உடல் உழைப்பில் கூட ஈடுபடுவதில்லை என்பதே யதார்த்தம். இவ்வாறு அரைமணி நேரம் உழைத்தால் மட்டுமே ஆண்டுக்கு 19 லட்சம் பேரின் மரணத்தை தடுத்து விடமுடியுமாம். உணவுச்சூழலும் உழைப்புச் சூழலும் மாறியதே பருமன் போன்ற வாழ்க்கைமுறை நோய்களின் தாக்குதலுக்குக் காரணம். இனியும் இதுபற்றி யோசிக்காவிட்டால் அடுத்த தலைமுறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த விஷயத்தில் தமிழகம் கேரளாவிடமும் கர்நாடகத்திடமும் பாடம் படிக்க வேண்டும். கர்நாடகத்தில் நீரிழிவுத் தாக்குதல் அதிகமாகத் தொடங்கிய நிலையில், உடனடியாக தானிய உணவுகள் பற்றிய பரப்புரை தொடங்கப்பட்டது.
நான்கைந்து ஆண்டுகளில் கேழ்வரகு, கம்பு, கோதுமை, சாமை என முழுக்க, முழுக்க தானியத்துக்கு மாறிவிட்டது கர்நாடகா. ஆயுர்வேத சிகிச்சைக்குப் பெயர்போன கேரளாவிலோ ஒருபடி மேலே போய் உணவே மருந்தாக மாறி இருக்கிறது. சைவ, அசைவ வேறுபாடு இல்லாமல், திட்டமான சேர்மானங்கள், செய்முறைகளால் வயிறே வாழ்த்தும் அளவுக்கு சமைக்கிறார்கள். பண்டிகைக்கால பதார்த்தங்களும் அதே நேர்த்தி. கேரள மக்களின் எழிலுக்கு அவர்களின் உணவும் ஒரு காரணம்.
அரிசி வடை கேரளத்தின் பாரம்பரிய பதார்த்தம். வடிவத்தில் நம்மூர் பருப்பு வடையை ஒத்திருக்கும் இது, தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுப்பதால் தனித்துச் சுவையோடு இருக்கிறது. உடலை வதைக்காத இதமான பதார்த்தம். பண்டிகை, வழிபாடு, சடங்குகளில் இறைவனுக்குப் படைக்கப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
» குழந்தைகளின் உடல் பருமனுக்கு பெற்றோரே பொறுப்பு
» உடல் பருமனுக்கு மரபணுவே காரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum