மார்பக புற்று நோய்
Page 1 of 1
மார்பக புற்று நோய்
முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையே. சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும் போது மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம்.
சிலருக்கு இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிட பெரிதாக இருக்கும். இது பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அந்த அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில் எடுப்பது அவசியம். மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட் குழிவு ஏற்பட்டால்.
மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம் ஏற்பட்டால் காம்பின் தோற்றத்தில் மாற்றம் அல்லது காம்பு உள்வாங்கப்பட்டால் முலைக்காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால் மார்பகத்தில் வலி ஏற்பட்டால் சில பெண்களுக்கு மாத விடாய் நேரத்தில் வலி ஏற்படுவதுண்டு.
இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
பரிசோதனைகள்.....
மார்பகத்தில் கட்டியிருந்தால் அல்லது இருக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தால் பரிசோதனைகள் மூலமே விடை காண முடியும்.
1 மகோகிறபி அல்லது மார்பக கதிர்ப்படம் என்பது மிக முக்கியமானதாகும்,. கைகளினால் தடவிக் கண்டு பிடிக்க முடியாத சிறிய கட்டிகளைக் கூட மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. கதிர்படங்கள் போலல்லாது மிகக் குறைந்தளவு கதிர் வீச்சு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஆபத்தற்றது.
2. ஸ்கான் பிரிசோதனை கட்டியிருக்கிறதா எனச் சந்தேகம் இருந்தால் அதனைக் கண்டறிய மிக உதவியானது அதிலும் முக்கியமாக இளம் பெண்களில் கட்டி மிகத் தளிவாகத் தெரியும்.
3. சிறிய ஊசி மூலம் கட்டியிலுள்ள சிறியளவு திசுக்களை உறிஞ்சி எடுத்து பெற்று இழையவியல் பரிசோதனை செய்தல், கட்டியானது ஆபத்தற்ற சாதாரண கட்டியா, புற்று நோயா போன்ற விபரங்களை அறிய இது அவசியமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» “மரபணுக்களால் மார்பக புற்று நோய் உருவாகிறது”
» பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்
» மார்பக புற்று நோய் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
» முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம்...
» மார்பக புற்று நோயின் படி நிலைகள்
» பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்
» மார்பக புற்று நோய் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
» முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம்...
» மார்பக புற்று நோயின் படி நிலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum