குழந்தை பிறந்த பின் தேவையான அறிவுரை
Page 1 of 1
குழந்தை பிறந்த பின் தேவையான அறிவுரை
சிசேரியன் செய்யப்பட்டு, குழந்தையை பெற்றெடுத்த பின் மீண்டும் எத்தனை வருட இடைவெளி விட்டு கர்ப்பமாக வேண்டும். ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கும் கர்ப்பப்பை காயம் ஆறி பழைய நிலையை அடைய எத்தனை மாதங்களாகும்? எத்தனை வாரங்கள் கழித்து உறவு வைத்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் புகட்டும்போது உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் ஆகாது என்பது சரியா? என்ற பலவிதமான கேள்விகள் இன்றைய பெண்களில் மனதில் உள்ளது. அதற்கான விளக்கம் இதே..
24, 25 வயது பிரசவத்திற்கு மிகப் பொருத்தமானது. முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே மூன்று வருட இடைவெளி இருக்கும் விதத்தில் அடுத்த கர்ப்பத்தை உருவாக்குங்கள். சிசேரியன் எப்படி நடக்கும் என்பதை விளக்கி விடுகிறேன்.
வயிற்று சுவர் பகுதியில் ஐந்தோ, ஆறோ அடுக்குகள் கீறப்பட்டு- வயிற்றின் உள்ளறை பகுதிக்கு சென்ற பிறகு, கர்ப்பப்பையின் கீழ் பாகத்தை ஆபரேஷன் மூலம் திறப்பார்கள். அதன் வழியாக குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதுதான் சிசேரியன்.
குழந்தையை வெளியே எடுத்த பின்பு சிசேரியன் செய்யப்பட்ட பகுதி, தையல் மூலம் இணைக்கப்படும். கருப்பையை திறந்த பகுதியிலும், வயிற்று சுவர் அடுக்குகளிலும் காயம் இருக்கும். பொதுவாக 21 நாட்களுக்குள் அந்த காயங்கள் ஆறிவிடும். ஆனாலும் உடலுக்கு உற்சாகமும், தேவையான பலமும் கிடைக்க கூடுதலாக 21 நாட்கள் தேவைப்படும்.
அதனால் சிசேரியன் முடிந்து ஆறு வாரங்கள் கடந்த பிறகு நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். கூடுதலாக இன்னொரு ஆறு வாரங்கள் (அதாவது சிசேரியன் முடிந்து 3 மாதங்கள்) கழித்து நீங்கள் முழுமையான உடலுறவை மேற்கொள்ளலாம்.
(இந்த காலகட்டத்திற்கு முன்பே உடலுறவு மேற்கொள்வது உங்கள் இருவர் விருப்பத்தையும் பொறுத்தது) குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது ஓரளவு கருத்தடை போல் செயல்படும். அதுவும் முதல் ஆறு மாதங்கள்தான். நீங்கள் தாய்ப்பால் புகட்டினாலும், நம்பகமான வேறு கருத்தடை முறையை கடைப்பிடித்து, `தாம்பத்யம்' வைத்துக்கொள்வதே சிறந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே! : அட்வைஸ் ரிப்போர்ட்
» குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா?
» பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்
» பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்
» மேலதிக மரபணுவுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum