தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்

Go down

 மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்  Empty மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்

Post  ishwarya Sat May 04, 2013 5:40 pm

மதுரை, பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் கணேஷ்குமார். இவரிடம் கடந்த 3.11.2011 அன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவருடைய சொந்த தேவைகளுக்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கினாராம். அந்த பணத்தை ஒரு சதவீத வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் திரும்ப தருவதாக கூறினார். இதனை நம்பிய கணேஷ்குமார் பணத்தை கொடுத்தார். ஆனால் சீனிவாசன் வட்டி, அசலை திரும்ப கொடுக்கவில்லை.

பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் 3.1.2012 தேதியிட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து செக்கை கொடுத்தார். கணேஷ்குமார் அதை அவரது கணக்கில் செலுத்தியபோது, போதிய பணம் இருப்பில் இல்லை என்று கூறி திரும்பி வந்தது.

இதையடுத்து சீனிவாசனுக்கு எதிராக கணேஷ்குமார் மதுரை 2-வது விரைவு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பல முறை சீனிவாசன் ஆஜராக வில்லை. இந்த நிலையில் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) வி.இருதயராணி, பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் இன்று மதுரை 2-வது விரைவு கோர்ட்டில் நீதிபதி (பொறுப்பு) சுந்தரம் முன்னிலையில் ஆஜரானார். அப்போது அவர் ஒரு மனுவும் தாக்கல் செய்தார். அதில், தனது மீதான பிடிவாரண்டு உத்தரவை தளர்த்த வேண்டும் என்றும், வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீது பிற்பகலில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி சுந்தரம் கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டை விட்டு வெளியே வந்தார். அவர் மீண்டும் பிற்பகலில் கோர்ட்டில் ஆஜராகிறார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கோர்ட்டில் ஆஜரானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
» பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum