நடிகர் சங்க உண்ணாவிரதம் முடிந்தது: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Page 1 of 1

தென் இந்திய நடிகர்-நடிகைகள் சார்பில் தி.நகரில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி னார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விக்ரம், சூர்யா, கார்த்திக், ராதிகா, அம்பிகா, தேவயானி, நமீதா, தன்ஷிகா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உண்ணாவிரத முடிவில் நடிகர் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வாசித்தார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு நன்றி. இலங்கை அரசு தமிழர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்கும்வரை இலங்கைக்கு இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக உயிரத் தியாகம் செய்யாமல் அறவழியில் போராட வேண்டும். இலங்கை தமிழர்களை பாதுகாக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்ஈழத்தை வற்புறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!
» உண்ணாவிரதம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து
» அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum