தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

Go down

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Empty அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

Post  ishwarya Tue Apr 16, 2013 6:26 pm

அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. இளைஞர்கள், மாணவ- மாணவிகள் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர், நடிகைகளும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தி நடிகர், நடிகைகள் அன்னா ஹசாரேவுக்கு துணையாக இருப்போம் என அறிவித்து உள்ளனர்.

தெலுங்கு நடிகர், நடிகைகள் ஐதராபாத்தில் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அனைவரும் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்தலைவர் முரளிமோகன் தலைமை வகித்தார். நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதிபாபு, விஜயசங்கர், நடிகை ஜீவிதா, சஞ்சனா, ஹேமா வந்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். நாகார்ஜூனா, மோகன் பாபு போன்ற பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை.

பழைய நடிகர் நாகேஸ்வர ராவ் மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்ச்சியில் முரளி மோகன் பேசும்போது, இந்திய சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களுக்கு எதிராக அன்னா ஹசாரே இரண்டாவது சுதந்திரப்போராட்டத்தை துவக்கி உள்ளார். அவருக்கு இந்தி திரையுலகினர் ஆதரவு அளித்துள்ளனர். அதுபோல் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட திரையுலகினரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்
» முல்லைப் பெரியாறு அருகே தமிழ் இயக்குனர்கள் 8ம் தேதி உண்ணாவிரதம்: நடிகர்- நடிகைகள் பங்கேற்பார்களா?
» இலங்கை அரசை கண்டித்து நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்.
» அன்னா ஹசாரேவுடன் விஜய் உண்ணாவிரதம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum