தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாதிரியார் வேடத்தில் கைதிகள்: மலையாள படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

Go down

பாதிரியார் வேடத்தில் கைதிகள்: மலையாள படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு Empty பாதிரியார் வேடத்தில் கைதிகள்: மலையாள படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

Post  ishwarya Thu Mar 28, 2013 2:02 pm

சமீபத்தில் கேரளாவில் வெளிவந்த மலையாளப் படம் ரோமன்ஸ். இதில் வரும் 2 கதாநாயகர்கள் குற்றவாளிகள். போலீசிடமிருந்து தப்பி, பாதிரியாரின் வேடத்தில் ஒரு கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து விடுகின்றனர்.

தங்களை தலைமை (பிஷப்) பாதிரியார்தான் அனுப்பி வைத்ததாக கூறி அங்கிருக்கும் அனைவரையும் முட்டாள்கள் ஆக்கி இருவரும் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

இதுபோன்ற காட்சிகள் உள்ள இந்தப் படம் வெளிவந்த ஒரு வாரத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்தப் படத்தில் கிறிஸ்தவ தேவாலயம் காட்டப்படும் விதமும், பாதிரியார்களுக்கிடையேயான உள்சண்டை போன்ற காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளைப் பாதிப்பதாக உள்ளது எனக் கூறினர்.

இந்தப் படத்தை போபன் சாமுவேல் இயக்க, குஞ்சக்கன் போன் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், ரோமன்ஸ் படம் வி.ஆர்.நோ ஏஞ்சல்ஸ் என்ற பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum