2 வருடத்துக்கு பிறகு நடிக்கிறார் வடிவேலு
Page 1 of 1
2 வருடத்துக்கு பிறகு நடிக்கிறார் வடிவேலு
காமெடி நடிகர் வடிவேலு கடந்த இரண்டு வருடமாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பல இயக்குனர்கள் அவரை புறக்கணிக்கவும் செய்தனர். அத்துடன் வழக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது அவற்றில் இருந்து மீண்டுள்ளார்.
அவருக்கு பட வாய்ப்புகளும் வரத் துவங்கியுள்ளன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிப்பார் என பேச்சு அடிபட்டது. ஆனால் அதற்கு பதில் தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இதில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
வடிவேலு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது பார்வதி ஓமனகுட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர். பார்வதி ஓமனகுட்டன் ‘பில்லா 2’ படத்தில் அஜீத்துடன் நடித்தவர். ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ஏஜி.எஸ்.என்டர் டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிவாஜியின் கர்ணன் படம் 100-வது நாள் விழா: 48 வருடத்துக்கு பிறகு மீண்டும் சாதனை
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு
» இனி வருடத்துக்கு ஒரு படம்: அஜீத் அதிரடி
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு
» இனி வருடத்துக்கு ஒரு படம்: அஜீத் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum