தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நடிக்கிறார் வடிவேலு

Go down

மீண்டும் நடிக்கிறார் வடிவேலு Empty மீண்டும் நடிக்கிறார் வடிவேலு

Post  ishwarya Sat Mar 16, 2013 4:57 pm

காமெடி நடிகர் வடிவேலு கடந்த ஒன்றரை வருடமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ததால் புதுப்படங்களில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லை.

இந்த நிலையில் சிங்கமுத்துவுடன் மோதல் வழக்கு பிரச்சினைகளும் அவரை சூழ்ந்தன. அவற்றில் இருந்து விடுபட்டு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

‘தெனாலிராமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இதில் வடிவேலு இரட்டை வேடத்தில் வருகிறார். ஏற்கனவே ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் இரு வேடங்களில் நடித்தார்.

‘தெனாலிராமன்’ படம் குறித்து இயக்குனர் யுவராஜ் கூறும்போது, முழுநீள காமெடி படம். சரித்திர கதை பின்னணியில் உருவாகிறது. கதையை வடிவேலுவிடம் சொன்னதும் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றார்.

இதுதவிர சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum