தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேச்சியக்கா மருமகன் படத்தின் மூலம் மீண்டும் ஊர்வசி

Go down

பேச்சியக்கா மருமகன் படத்தின் மூலம் மீண்டும் ஊர்வசி Empty பேச்சியக்கா மருமகன் படத்தின் மூலம் மீண்டும் ஊர்வசி

Post  ishwarya Sat May 04, 2013 2:48 pm

தருண்கோபி- பிரியங்கா ஜோடியாக நடிக்க பேச்சியக்கா மருமகன் என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. இதில் மாமியார் வேடத்தில் ஊர்வசி நடிக்கிறார்.

ஊர்வசி இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார். பேச்சியக்கா மருமகள் படம் மூலம் மீண்டும் வருகிறார். இதுகுறித்து ஊர்வசி கூறும்போது, இயக்குனர் பாலகுமார் என்னை அணுகி கதை சொன்னார். மிகவும் பிடித்தது. உணர்வு பூர்வமான குடும்ப கதையாக இருந்தது. இதுவரை நடிக்காத கதாபாத்திரம் எனவே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.

படம் பற்றி தருண்கோபி மற்றும் இயக்குனர் பாலகுமார் கூறும்போது, மருமகன் என்பவன் அந்த வீட்டின் மகனாக மாறிப்போவதே கதை. ஊர்வசி அசல் கிராமத்து பெண்ணாக வருகிறார். டப்பிங் பேச வந்தபோது உண்மையில் இது நான்தானா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார். இந்த படத்துக்கு பின் பேச்சியக்கா மாதிரியான உறவுகளை நம் மனசு தேட ஆரம்பிக்கும் என்றனர்.

இதில் தம்பிராமையா, செவ்வாளை தனம், மகேந்திரன் போன்றோரும் நடித்துள்ளனர். தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சபேஷ்- முரளி இசையமைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum