அகம் புறம் படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் ஷாம்!!
Page 1 of 1

12 பி படத்தின் மூலம் நாயகனாக தமிழ்த் திரையில் அறிமுகமாகி, தொடர்ந்து லேசா லேசா, இயற்கை, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, தூண்டில் உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களின் நாயகனாக நடித்த ஷாம், தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
திருமலை இயக்க, சுந்தர் சி பாபு இசையில் உருவாகி வந்த அகம் புறம் படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார் ஷாம்.
அகம் புறம் படத்தைத் தயாரிப்பது குறித்து நேற்று புதன்கிழமை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஷாம்.
அவர் கூறுகையில், “கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முனபு பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். அதன் பிறகு இப்போதுதான். ஆனாலும் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த எனக்கும் பத்திரிகைப் பக்ககங்களில் ஒரு இடம் கொடுத்து வரும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.
அகம் புறம் படத்தை முதலில் ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்க ஒப்புக் கொண்டது. பாதிப்படம் வளர்ந்த நிலையில் பட்ஜெட் தாங்காது என்று அவர்கள் விலகிக் கொண்டனர். சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க வேண்டி இருந்தது. அதற்கு பட்ஜெட் இடம் தரவில்லை என்று கூறிவிட்டனர். எனவே இந்தப் படத்தை நானே தயாரிக்க முடிவு செய்து விட்டேன்.
இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் கூட இப்படி பாதியில் தடுமாறியுள்ளன. ஆனால் அவற்றை நான் தயாரிக்கவோ, பணம் கொடுத்து உதவவோ முன்வந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் இந்த படத்தின் டீம் என்னோடு பழகிய விதம் போன்றவைதான் இந்தப் படத்தை நான் தயாரிக்கக் காரணமாக அமைந்தன.
இயக்குநர் திருமலை என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகச் சிறப்பாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். படம் வெளியான பிறகு நான் சொல்வது எந்த அளவு உண்மை என்பது உங்களுக்கே புரியும்.
எனக்கு அண்ணனோ, அப்பாவோ சினிமாவில் பின்பலமாக இல்லை. இருந்திருந்தால் பெரிய அளவு வந்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லையே என்று நினைத்து நான் வருத்தப்படவில்லை.
தெலுங்கில் நிறையப் பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தெலுங்கானா பிரச்சினை காரணமாக அவற்றில் நடிப்பதை தள்ளிப் போட்டுள்ளேன். நான் தெலுங்கில் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற கிக் படம் தமிழில் தில்லாலங்கிடி என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்திலும் தெலுங்கில் நான் செய்த அதே ரோலை செய்கிறேன். இந்தப் படத்துக்காக ஜெயம் ரவி, ராஜா, எடிட்டர் மோகன் ஆகியோருடன் ஒரு குடும்பமாக பணியாற்றியது மிகுந்த நிறைவைத் தந்தது.
அகம் புறம் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் புதிய படம் தூசி. இந்தப் படத்தையும் திருமலைதான் இயக்குகிறார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும். தூசி கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இந்தப் படம்.
நான் பாலிவுட்டில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது உண்மைதான். படத்துக்கு தலைப்பு கூட ‘ஐயாம் ஸாரி (I am sorry)’ என்று வைத்துவிட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்தபிறகே அந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன். அதேபோல கன்னடத்திலும் நடிக்கிறேன். இந்தியாவின் பல மொழிகளிலும் நடிப்பது சந்தோஷமாக இருந்தாலும், இனி புதிய படங்கள் நடிக்கும் போது, அனைத்து விஷயங்களும் சரியாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன்…”, என்றார் ஷாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தி படத்தில் நடிக்கிறார் ஷாம்!
» பேச்சியக்கா மருமகன் படத்தின் மூலம் மீண்டும் ஊர்வசி
» எண்ணமே வாழ்வு அகமே புறம்
» எண்ணமே வாழ்வு அகமே புறம்
» 3டி காமெடி படத்தில் ஷாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum