தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்

Go down

நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட் Empty நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்

Post  ishwarya Sat May 04, 2013 2:32 pm

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தை கைது செய்யும்படி, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை அந்தேரி நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளர் ஷகீல் நூராணி என்பவர் 'ஜான் கி பாசி' என்ற படத்தை தயாரிக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிட்டார்.

இப்படத்தில் சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா ஆகியோரை கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சஞ்சய் தத்திற்கு முன் பணமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. படத் தயாரிப்பு பணிகள் பாதி முடிந்த நிலையில் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க சஞ்சய் தத் மறுத்து விட்டார்.

இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஷகீல் நூராணி முறையிட்டார். அவர்கள் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாததையடுத்து மும்பை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட ரூ.2 கோடி நஷ்டத்திற்கு சஞ்சய் தத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என அவர் வாதாடினார். இதனையடுத்து சஞ்சய் தத்தின் வீடு, அலுவலகம் ஆகியவற்றை முடக்கி கடந்த 2010ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு பிறகு ஷகீல் நூராணி அந்தேரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார்.

இம்மனுவின் மீது கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடத்திய நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க சஞ்சய் தத் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சஞ்சய் தத் ஆஜராகாததால், அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தும்படி, ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட்டை நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிடிவாரண்ட் எதிரொலி: நடிகர் சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜர்
» சஞ்சய் தத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை எனக்கு வேதனையளிக்கிறது… ரஜினிகாந்த்
» சஞ்சய் தத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை எனக்கு வேதனையளிக்கிறது… ரஜினிகாந்த்
» பிடிவாரண்ட் உத்தரவு: நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்
» நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை: இந்தி படவுலகம் அதிர்ச்சி: புதிய படங்களின் கதி என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum