பிடிவாரண்ட் எதிரொலி: நடிகர் சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜர்
Page 1 of 1

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தை கைது செய்யும்படி, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை அந்தேரி நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.
பாலிவுட் தயாரிப்பாளர் ஷகீல் நூராணி என்பவர் 'ஜான் கி பாசி' என்ற படத்தை தயாரிக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிட்டார். இப்படத்தில் சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா ஆகியோரை கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சஞ்சய் தத்திற்கு முன் பணமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. படத் தயாரிப்பு பணிகள் பாதி முடிந்த நிலையில் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க சஞ்சய் தத் மறுத்து விட்டார்.
பணத்தை திருப்பி கேட்பதால் நிழல் உலக தாதாக்களை வைத்து சஞ்சய் தத் என்னை மிரட்டி வருகிறார் என்றும் ஷகீல் நூராணி தெரிவித்திருந்தார். இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஷகீல் நூராணி முறையிட்டார். அவர்கள் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாததையடுத்து மும்பை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட ரூ.2 கோடி நஷ்டத்திற்கு சஞ்சய் தத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என அவர் வாதாடினார். இதனையடுத்து சஞ்சய் தத்தின் வீடு, அலுவலகம் ஆகியவற்றை முடக்கி கடந்த 2010ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு பிறகு ஷகீல் நூராணி அந்தேரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார்.
இம்மனுவின் மீது கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடத்திய நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க சஞ்சய் தத் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சஞ்சய் தத் ஆஜராகாததால், அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தும்படி, ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட்டை நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் பிறப்பித்தார்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தகவலை வக்கீல் மூலம் அறிந்த சஞ்சய் தத், சில மணி நேரத்தில் நீதிபதி முன் சரணடைந்தார்.
இதனையடுத்து, அவரை ஜாமினில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்
» மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
» செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum