நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை: இந்தி படவுலகம் அதிர்ச்சி: புதிய படங்களின் கதி என்ன?
Page 1 of 1

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால், இந்தி படவுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
1993–ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அம்மனு மீது நேற்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, சஞ்சய் தத்துக்கு தடா கோர்ட்டு வழங்கிய 6 ஆண்டு சிறை தண்டனையை, 5 ஆண்டு தண்டனையாக குறைத்து தீர்ப்பு கூறியது. குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், அவருக்கு நன்னடத்தை சலுகையின் கீழ் கருணை காட்ட கோர்ட்டு மறுத்து விட்டது. 53 வயதாகும் சஞ்சய் தத் 1½ ஆண்டு காலத்தை சிறையில் ஏற்கனவே கழித்து விட்டார். எனவே மீதி 3½ ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இந்தி படவுலகம் அதிர்ச்சி
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் இந்தி படவுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் தற்போது நடித்து வரும் சன்ஜீர் ரீமேக் படம், போலீஸ்கிரி, ராஜ்குமார் ஹிரானியின் பிகாய் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் கதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் ஹிரானியின் முன்னாபாய் 3–வது பாகத்தில் நடிப்பதற்கும் சஞ்சய் தத் தேதி கொடுத்து இருந்தார். அப்படத்தின் நிலைமையும் என்ன? என்று தெளிவாக தெரியவில்லை. டைரக்டரும், தயாரிப்பாளருமான கரன் ஜோகார், தனது உங்கிளி படத்தில் சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்திருந்தார். அவர் கூறுகையில், சஞ்சய் தத்தின் தண்டனையை கேள்விப்பட்டு நான் உண்மையில் நொறுங்கி போய் விட்டேன். இது அவருக்கு உரித்தான தண்டனை இல்லை என்பது என்னுடைய கருத்து என்றார்.
சுபாஷ் கபூர்–மகேஷ் பட்
முன்னா பாய் மூன்றாவது பாகத்துக்கு சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்துள்ள டைரக்டர் சுபாஷ் கபூர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தருகிறது. சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கூடுதலாக கருணை காட்ட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்தேன். எனது அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் முன்னாபாய் மூன்றாவது பாகம் பாதிக்கப்படுமா? என்று கேட்டதற்கு, இதுபற்றி முன்கூட்டியே கருத்து தெரிவிக்க இயலாது. என்னுடைய தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா அமெரிக்காவில் உள்ளார். ராஜு (ஹிரானி) பிகாய் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். விது திரும்பியதும், நான் அவரிடம் இதுபற்றி பேசுவேன். இப்படம் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது என்றார்.
டைரக்டரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட் கருத்து தெரிவிக்கையில், சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது வருத்தம் அளிக்கிறது. பாலிவுட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்கு நியாயமான நிவாரணம் கிடைக்கும் என்று நம்பினோம். எனினும் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
குணால் கோலி
டைரக்டர் குணால் கோலி கூறுகையில், 1993–ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு சஞ்சய் தத் மீது பாய்ந்திருக்க கூடாது. பின்லேடன் போல உண்மையான சதிகாரர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இசையமைப்பாளர் விஷால் தத்லானி கூறுகையில், நான் சட்டத்தை எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை. ஆனால் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை எனது இதயத்தை நொறுக்கி விட்டது என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கற்பழிப்பு வழக்கு: நடிகர் சைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறை
» நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு – டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
» சிறை செல்ல மேலும் கால அவகாசம் வேண்டும்: சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு
» பிடிவாரண்ட் எதிரொலி: நடிகர் சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum