தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். கிரிக்கெட்டால் படங்கள் வசூல் பாதிப்பு: தயாரிப்பாளர்கள் நஷ்டம்

Go down

ஐ.பி.எல். கிரிக்கெட்டால் படங்கள் வசூல் பாதிப்பு: தயாரிப்பாளர்கள் நஷ்டம் Empty ஐ.பி.எல். கிரிக்கெட்டால் படங்கள் வசூல் பாதிப்பு: தயாரிப்பாளர்கள் நஷ்டம்

Post  ishwarya Sat May 04, 2013 2:09 pm

ஏப்ரல் 3-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் துவங்கியது. மே 26-ந்தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.

ஐ.பி.எல். போட்டியால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. போட்டி துவங்கியதில் இருந்து இதுவரை சுமார் 25 படங்கள் ரிலீசாகியுள்ளன. அவற்றில் பெரிய பட்ஜெட் படங்களாக சென்னையில் ஒரு நாள், சேட்டை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உதயம், என்.எச்.4 போன்றவை ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்டவை. சிறு பட்ஜெட் படங்கள் அடுத்த மூன்று வாரங்களில் மேலும் 10 படங்கள் வர இருக்கின்றன.

ரிலீசான படங்களில் சில படங்கள் தவிர கூடுதலான படங்கள் நஷ்டம் அடைந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறும்போது, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் நடக்கின்றன. இதனால் பிற்பகல் காட்சி மற்றும் மாலை, இரவு காட்சிகளில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது இல்லை. ஐ.பி.எல். போட்டியால் 50 சதவீதம் வரை வசூல் குறைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டங்கள் நடக்கும் போது தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன என்றார்.

தயாரிப்பாளர்கள் பலர் ஐ.பி.எல். போட்டியால் தங்கள் படங்களின் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டு விட்டன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum