பாண்டிய நாடு படத்தில் அப்பா வேடத்தில் டைரக்டர் பாரதிராஜா
Page 1 of 1

நடிகர் விஷால் அவருடைய பெயரில் (விஷால் பிலிம் பேக்டரி) சொந்த பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த பட நிறுவனம் சார்பில் அவர், 'பாண்டிய நாடு' என்ற படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சுசீந்திரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது.
விஷால்-லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 'பாண்டிய நாடு' படத்தில் விஷாலுக்கு அப்பாவாக, ஒரு கனமான கதாபாத்திரம் இருக்கிறது. இது, விஷால் கதாபாத்திரத்துக்கு இணையான வேடம். இந்த வேடத்தில், யாரை நடிக்க வைப்பது என்று தேடி வந்தார்கள்.
இப்போது அந்த வேடத்துக்காக, டைரக்டர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது, ''எனக்கு அப்பாவாக பாரதிராஜா நடிப்பது பெருமையாக இருக்கிறது. அந்த வேடத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார்'' என்றார்.
டைரக்டர் சுசீந்திரன் கூறியதாவது:- ''படத்தில் விஷாலுக்கு ஈடு-இணையானது, அவருடைய அப்பா கதாபாத்திரம். அதற்கு பல நடிகர்களை தேடினோம். யாரும் பொருத்தமாக இல்லை. கடைசியாக, டைரக்டர் பாரதிராஜா நினைவுக்கு வந்தார்.
அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் போய் கேட்டபோது, முதலில் தயங்கினார். பிறகு சம்மதித்தார். ''என்னை நீ நடிக்க வைத்து விடுவாயா?'' என்று மட்டும் கேட்டார். நடிக்க வைத்து விடுவேன் என்று சொன்னேன். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் சென்னையிலும், மதுரையிலும் படமாக்க இருக்கிறோம்.''
இவ்வாறு சுசீந்திரன் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாரதிராஜா படத்தில் நடிக்காதது ஏன்? – பார்த்தீபன்
» அப்பா வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த சாமி!
» தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு வலியுறுத்தி லண்டனில் எழுச்சிப்பேரணி: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு
» பாரதிராஜா படத்தில் மீனாள்
» பாரதிராஜா படத்தில் தனுஷ்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum