வீர நாராயணப் பெருமாள் கோவில்
Page 1 of 1
வீர நாராயணப் பெருமாள் கோவில்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர்- வீர நாராயணப் பெருமாள் கோவிலில் எங்கும் இல்லாத விதமாக சக்கரத்தாழ்வார் பிரயோக சக்கரமாக பக்தர் களுக்கு அருள் பாலிப்பது விசேஷமானதாகும். இது குறித்து கொடுமுடி மகுடேஸ்வரர்- வீர நாராயணப் பெருமாள் கோவிலின் பட்டாச்சாரியார்கள் ஸ்ரீதர் மற்றும் கோபால் ஆகியோர் கூறியதாவது:-
ஒருமுறை விஷ்ணு பகவான் சிவபெருமானை 1008 தாமரை மலர்கள் கொண்டு பூஜித்துக் கொண்டு இருந்த போது சிவபெருமான் விஷ்ணு பகவான் அறியாத வகையில் ஒரு தாமரை மலரினை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.
இதை அறியாத விஸ்ணு பகவான் ஒரு மலர் குறைவதை அறிந்து அந்த ஒரு மலருக்கு பதில் தனது ஒரு கண்ணினைப் பிடுங்கி சிவனுக்கு அர்ப்பணித்து தனது பூஜையினை முடித்தார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் விஷ்ணு பகவானுக்கு சுதர்சன சக்கரம் என்னும் சக்கரத்தை கொடுத்தார்.
இதைத் தான் சக்கரத்தாழ்வார் என்று அழைக்கின்றோம். கொடுமுடியில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு என தனி சந்நிதி கிடையாது. மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரயோக சக்கரமாக இருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரை 12 வாரங்கள் சனிக்கிழமை அல்லது புதன்கிழமை தோறும் தவறாமல் பேரீச்சம் பழம், கற்கண்டு நைவேத்யம் செய்து பூஜித்து வந்தால் சத்ரு (எதிரிகள்) தொல்லைகளில் இருந்து மீளப் பெறுவார்கள்.
மேலும் பில்லி, சூனியம், செய்வினை எனப்படும் பிரச்சினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். கணவன்-மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் அகலும். தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
திருஷ்டி சம் பந்தமான பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி பெறுவார்கள். மேலும் சக்கரத்தாழ் வாரை பெருமாளுக்கு உகந்த புதன்கிழமை வரும் திருவோண நட்சத்திரம் மற்றும் சித்திரை நட்சத்திரம் அன்று வழிபடுவது சிறப்பானதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்தலசயனப் பெருமாள் கோவில்
» திருத்தங்கல் நாராயணப் பெருமாள் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» வரதராஜ பெருமாள் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum